For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்தில் கட்டம் சரியில்லை.. ஆஸ்திரேலியாவில் சரியாக இருக்குமா? #முரளிவிஜய்

மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக நீண்ட காலம் பயணித்த முரளி விஜய், இங்கிலாந்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என பாதி தொடரில் இருந்து முரளி விஜயை அணியில் இருந்து நீக்கியது தேர்வுக் குழு.

அதன் பின், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காத அவர், போராடி மீண்டும் அணிக்குள் வாய்ப்பு பெற்றுள்ளார்.

போராடி இடம் பிடித்த விஜய்

போராடி இடம் பிடித்த விஜய்

அடுத்து, இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதில் டெஸ்ட் அணியில் முரளி விஜய் இடம் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் போராடி இடம் பிடித்து விட்டார்.

விஜய்க்கு கை கொடுத்த கவுன்டி

விஜய்க்கு கை கொடுத்த கவுன்டி

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் பூஜ்யம் எடுத்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து அணியில் இருந்து நீக்கிய பின், எசக்ஸ் அணியில் இணைந்து 56, 100, 85, 80, 2 என ஐந்து இன்னிங்க்ஸ்களில் ஒன்று தவிர மற்ற அனைத்திலும் சிறப்பாக ரன் குவித்தார்.

விஜய்க்கு இடம் போய் விடும்

விஜய்க்கு இடம் போய் விடும்

எந்த இங்கிலாந்து மண்ணில் அவர் சொதப்பினாரோ, அங்கேயே போராடி ரன் குவித்து தன் பார்மை நிரூபித்தார். இங்கிலாந்தில் ஏமாற்றியது போல ஆஸ்திரேலியாவில் ஏமாற்றாமல் முரளி விஜய் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்போது ஆஸ்திரேலியாவில் முரளி விஜய் சொதப்பினால், அவரது இடத்தை நிரப்ப அடுத்த கட்ட வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

வரிசையில் துவக்க வீரர்கள்

வரிசையில் துவக்க வீரர்கள்

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்டில் கலக்கிய ப்ரித்வி ஷா, நீண்ட காலம் கழித்து டெஸ்ட்டுக்கு திரும்பியுள்ள ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் துவக்க வீரர் வாய்ப்புக்காக வரிசையில் இருக்கிறார்கள்.

கட்டாயத்தில் விஜய்

கட்டாயத்தில் விஜய்

இவர்களில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கிய ப்ரித்வி ஷாவுக்கு துவக்க வீரர் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி. ராகுல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்டில் பெரிதாக சாதிக்கவில்லை. ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, முரளி விஜய்க்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக ஆட அதிக வாய்ப்புள்ளது. இப்போது கிடைக்கும் வாய்ப்பில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, November 7, 2018, 18:31 [IST]
Other articles published on Nov 7, 2018
English summary
Will Murali Vijay be succesful at Australia after England failure
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+