Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 டீம்... 27 போட்டி.. ஆகஸ்ட் மாதத்தில் வெடிக்க வரும் "சீனி" வெடி!

சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருமான என்.சீனிவாசன் ஆதரவுடன் உருவாகியுள்ளது தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் லீக். ஐபிஎல் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லீக்கில் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளன.

8 அணிகளுடன், 27 போட்டிகளுடன் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளது. மொத்தம் 17 அணிகள் இதுதொடர்பான ஏலத்தில் கலந்து கொண்டன. அதில் 8 அணிகள் இறுதியாக தேர்வாகின.

இதுகுறித்து சீனிவாசன் கூறுகையில், இந்தத் தொடரின் முக்கிய நோக்கமே, தமிழகத்தில் உள்ள திறமைகளை வெளிக் கொண்டு வருவதுதான். அவர்களை இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றார்.

8 அணிகள்

8 அணிகள்

தென் சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தூத்தூக்குடி, திருவள்ளூர், கோவை, காரைக்குடி ஆகிய நகரங்களை அடிப்படையாக வைத்து இந்த எட்டு அணிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ரூ. 5.21 கோடிக்கு தூத்துக்குடி ஏலம்

ரூ. 5.21 கோடிக்கு தூத்துக்குடி ஏலம்

இந்த எட்டு அணிகளில் தூத்துக்குடி விளையாட்டு நிறுவனம் ஏலம் எடுத்துள்ள அணிதான் அதிகபட்சமாக ரூ. 5.21க்கு ஏலம் போயுள்ளது. அணி உரிமையாளர் பெயர் ஆல்பர்ட் முரளிதரன்.

சிவந்தி ஆதித்தன்

சிவந்தி ஆதித்தன்

தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த மெட்ரோநேஷன் சென்னை டிவி நிறுவனத்தின் சிவந்தி ஆதித்தன் 2வது அதிகபட்ச தொகையைக் கொடுத்து ஏலம் எடுத்தவர் ஆவர். இவர் ஏலம் எடுத்த அணியை ரூ. 5.13 கோடிக்கு எடுத்துள்ளார்.

லைக்கா

லைக்கா

இலங்கையைச் சேர்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் கூட ஒரு அணியை வாங்கியுள்ளளது. இந்த அணி ரூ. 5.01 கோடிக்கு ஒரு அணியை ஏலம் எடுத்துள்ளது.

மற்றவர்கள்

மற்றவர்கள்

இவர்கள் தவிர கோத்தாரி மெட்ராஸ் நிறுவனத்தின் ரபீக் அகமது ரூ. 4.01 கோடிக்கும், ரூபி பில்டர்ஸ் மனோகரன் ரூ. 3.69 கோடிக்கும், வி.பி சந்திரசேகர் ரூ. 3.48 கோடிக்கும், எச்ஆர் சீனிவாசன் ரூ. 3.42 கோடிக்கும், செட்டிநாட் அப்பேரல்ஸின் ஹரிஹரன் ரூ. 3.3 கோடிக்கும் அணிகளை ஏலம் எடுத்துள்ளனர்.

ரூ. 33.24 கோடி வருவாய்

ரூ. 33.24 கோடி வருவாய்

இந்த எட்டு அணிகளையும் ஏலம் விட்டதன் மூலமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு ரூ. 33.24 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

27 போட்டிகள்

27 போட்டிகள்

சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 3 நகரங்களில் 27 போட்டிகள் நடைபெறவுள்ளன. 3 வார காலம் போட்டிகள் நடைபெறும். இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எட்டு அணிகளும் மோதும். ஒவ்வொரு அணியும் தத்தமது குழுவில் இடம் பெற்றுள்ள அணியுடன் தலா 2 முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இருதிக்கு முன்னேறும்.

பரிசு ரூ. 1 கோடி

இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும். 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 60 லட்சம் கிடைக்கும். அரை இறுதிக்கு வரும் அணிகளுக்கு தலா ரூ. 40 லட்சம் கிடைக்கும். மற்ற அணிகளுக்கு ரூ. 25 லட்சம் போட்டிக் கட்டணமாக கிடைக்கும்.

பிற மாநில வீரர்கள்

பிற மாநில வீரர்கள்

இந்தப் போட்டிகளில் ஆட பிற மாநில வீரர்களையும் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, June 10, 2016, 11:37 [IST]
Other articles published on Jun 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+