For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

13ம் எண் ராசியும், இந்திய அணி கேப்டன் டோணியும்... கைகொடுக்குமா கடைசி டெஸ்ட்?

By Veera Kumar

உலக மக்களில் பெரும்பாலானோருக்கு 13வது எண் ராசியில்லாமல் இருக்கலாம், ஆனால் டோணிக்கு இப்போது 13வது எண்ணை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 57 டெஸ்டுகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும், 14 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது.

அதிகப்படியான தோல்வி

அதிகப்படியான தோல்வி

வெளிநாட்டு மண்ணில் டோணி தலைமையிலான இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது. இந்திய அணி தலைவர் ஒருவரது தலைமையில் வெளிநாட்டில் தோற்ற அதிகப்படியான எண்ணிக்கை இதுவாகும்.

லாரா, பிளம்மிங்

லாரா, பிளம்மிங்

உலக அளவில் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளம்மிங்கும், மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாாராவும் தங்கள் அணியை வெளிநாட்டு மண்ணில் 16 முறை மண்ணை கவ்வ செய்துள்ளனர். எனவே வெளிநாட்டில் அதிக தோல்வியடைந்த அணியின் கேப்டன்கள் என்ற, மோசமான சாதனையை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இப்படியே இருக்கிறேனப்பா

இப்படியே இருக்கிறேனப்பா

வெளிநாட்டில், இன்னும் மூன்று போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தால் டோணியும், லாரா மற்றும் பிளெம்மிங் வரிசையில் போய் சேருவார். எனவே 13 தோல்வி என்ற பட்டியலில் தொடரவே டோணி விரும்புகிறார்.

வெற்றி பெற்றேயாக வேண்டும்

வெற்றி பெற்றேயாக வேண்டும்

இந்தியா, இங்கிலாந்து நடுவேயான முதல் டெஸ்ட் டிரா, 2வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி, 3மற்றும் 4காவது டெஸ்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் இந்தியா வென்றால்தான் தொடரை டிரா செய்ய முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கை கொடுக்குமா கடைசி டெஸ்ட்

கை கொடுக்குமா கடைசி டெஸ்ட்

எனவே கடைசி டெஸ்ட் கைகொடுத்தால்தான் டோணி மேலும் நழுவாமல் இப்போதுள்ள நிலையில் தொடர முடியும். எனவே 13ம் எண்ணே காப்பாற்று என்று கூறும் நிலை டோணிக்கு. காலை வாறுகிறதா கை கொடுக்கிறதா 13 என்பது இந்த வார இறுதியில் தெரியவந்துவிடும்.

Story first published: Wednesday, August 13, 2014, 17:09 [IST]
Other articles published on Aug 13, 2014
English summary
India captain MS Dhoni will be hoping that the number 13 proves lucky for him. Dhoni, currently with 13 Test losses abroad as India skipper, is only 3 defeats away from equalling the worst record of 16.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+