Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக மாறுகிறது.. இந்தியாவை வீழ்த்த ஆஸி. அணி புதிய வியூகம்.. என்ன நடந்தது? - பரபர பின்னணி

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முக்கியமான கட்டத்தை நெருங்கி உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வென்று, தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் தீவிரமாக முயன்று வருகிறது.

இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இரண்டு அணிகளும் தற்போது வலைப்பயிற்சியை தொடங்கி உள்ளது.

எப்படி

எப்படி

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்த விரக்தியில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. இந்தியாவை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று ஆஸ்திரேலிய அணி கனவு கண்டது. ஆனால் களத்தில் மிகவும் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி ஷாக் கொடுத்தது.

திட்டம்

திட்டம்

மிக சிறப்பான திட்டமிடலுடன் களத்திற்கு வந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தியது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கண்டிப்பாக வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இதற்காக புதிய அணியை ஆஸ்திரேலியா களமிறக்க உள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

அதன்படி ஆஸ்திரேலிய அணியில் வார்னர் மற்றும் வில் புக்கோவஸ்கி இணைய உள்ளனர். ஜோ பர்ன்ஸ்,டிராவில் ஹெட் ஆகியோர் ஆணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர் என்று கூறப்படுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஹெட் நன்றாக ஆடினாலும் வில் புக்கோவஸ்கிக்கு வாய்ப்பு கொடுக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

எப்படி

எப்படி

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட், வார்னர், மாரன்ஸ், ஸ்மித், வில் புக்கோவஸ்கி, கேமரூன் கிரீன் , டிம் பெயின், பாட கும்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நாதன் லைன், ஜோஷ் ஹசல்வுட் ஆகியோர் களமிறங்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

பயிற்சி

பயிற்சி

இதற்காக இந்த வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக ஆஸ்திரேலிய பவுலர்கள் கூடுதல் நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறியது போல அடுத்த போட்டியில் திணற கூடாது என்று அணி நிர்வாகம் உறுதியாக உள்ளது.

Story first published: Friday, January 1, 2021, 9:46 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+