Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய அவமானம்.. ஏற்றுக்கொள்ள முடியாது.. முக்கிய வீரர்களை உள்ளே கொண்டு வரும் ஆஸி.. திடீர் மாற்றம்!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் கோலி இல்லாத நிலையில் இந்தியாவை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று ஆஸ்திரேலியா நினைத்தது.

இந்த தொடர் மொத்தத்தையும் கட்டுப்படுத்தலாம், இந்தியாவை வைட் வாஷ் செய்துவிடலாம் என்றுதான் ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால் ரஹானேவின் கேப்டன்சி ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மிக மோசமான ஆட்டத்தை ஆடி படுதோல்வி அடைந்துள்ளனர். முக்கியமாக இந்தியாவிற்கு எதிராக ஒரே ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி ஆஸ்திரேலிய அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மோசம்

மோசம்

இந்தியாவை குறைவாக எடைபோட்டுவிட்டோம். கோலி இல்லாமலும் இந்திய அணிக்கும் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய அணியை எதிர்கொள்ள இன்னும் கூடுதலாக தயாராகி இருக்க வேண்டும், தவறு செய்துவிட்டோம் என்று ஆஸ்திரேலிய அணி புலம்பும் நிலைக்கு சென்றுள்ளது. இந்த தோல்வியை ஆஸ்திரேலிய அணி பெரிய அவமானமாக கருதுகிறது.

மாற்றம்

மாற்றம்

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் ஜோ பர்ன்ஸ் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட உள்ளார். இவருக்கு பதிலாக அணிக்குள் மீண்டும் டேவிட் வார்னர் வருகிறார்.

நீக்கம்

நீக்கம்

முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் காயம் காரணமாக ஆடவில்லை. இந்த நிலையில்தான் டேவிட் வார்னர் மூன்றாவது டெஸ்டில் ஆடுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் அணிக்குள் தற்போது வில் புகோவஸ்கி இணைய உள்ளார்.

வில் புகோவஸ்கி

வில் புகோவஸ்கி

வில் புகோவஸ்கி யாருக்கு மாற்றாக வருவார் என்று விவரம் வெளியாகவில்லை. ஆஸ்திரேலியாவின் ஹெட் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வருகிறது. இரண்டு முக்கியமான வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதன் மூலம் அணியை மீண்டும் பார்மிற்கு கொண்டு வரலாம் என்று ஆஸ்திரேலியா நினைக்கிறது.

Story first published: Wednesday, December 30, 2020, 12:57 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+