Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனில் கும்ப்ளேவின் அதிக டெஸ்ட் விக்கெட் சாதனை.. முறியடிப்பாரா அஸ்வின்? வாய்ப்பு கிடைக்குமா ஒரு பார்வை

டோமினிக்கா : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 702 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் 479 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பாரா என்று தற்போது பார்க்கலாம்.

Will R Ashwin breaks Anil kumble record in most test wickets by indian

கும்ப்ளே விளையாடிய 132 டெஸ்டில் 619 விக்கெட் வீழ்த்திருக்கிறார். அஸ்வின் தற்போது வரை 93 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 479 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் அஸ்வின் இன்னும் 140 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். ஆனால் அஸ்வினுக்கு வயது தற்போது 36 ஆகியுள்ளது. அஸ்வின் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் விளையாடுகிறது. இதில் உள்ளூரில் 10 டெஸ்டில் இந்தியா விளையாடுகிறது. உள்ளூரில் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் அஸ்வின் இடம் பெறுவார். ஆனால் வெளிநாட்டில் அஸ்வினுக்கு இடம் கிடைப்பதில்லை. ஒட்டுமொத்தமாக அதிகபட்சமாக அஸ்வின் இதில் 15 டெஸ்டில் விளையாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இதில் அதிகபட்சமாக அஸ்வின் 100 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்க அவர் 580 விக்கெட்டுகள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அஸ்வினுக்கு வயது உடல் தகுதியும் பிரச்சனை என்பதால் அதற்கு மேல் அவரால் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை 39 வயது வரை விளையாடினால் அஸ்வினால் நிச்சயம் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும்.

கும்ப்ளே 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய போது 478 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.ஆனால் அஸ்வின் 93 டிஸ் போட்டிகளில் 479 விக்கெட்டுகள் என்ற இலக்கை தொட்டுவிட்டார்.

இதனால் அஸ்வின் குறைந்தது 25 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் நிச்சயம் கும்ப்ளேவின் ரெக்கார்ட் முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு வழங்குமா என்பது தான் சந்தேகம்.

Story first published: Thursday, July 13, 2023, 18:35 [IST]
Other articles published on Jul 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+