Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானேவின் 2வது டெஸ்ட் போட்டி "அதிர்ஷ்டம்".. இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றுமா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், அஜின்க்யா ரஹானேவின் ஆட்டம் உண்மையில் அவரை பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றி உள்ளது.

Recommended Video

Pujara மற்றும் Rahane திரும்ப திரும்ப அதே தவறை செய்றாங்க - VVS Laxman

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.

இதில், முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 391 ரன்கள் சேர்த்தது. இதனால், இந்தியாவை விட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

154 ரன்கள் முன்னிலை

154 ரன்கள் முன்னிலை

இந்த நிலையில், நேற்று (ஆக.15) நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. அஜின்க்யா ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். தற்போது ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 154 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

போராடும் இந்தியா

போராடும் இந்தியா

இந்த சூழலில், இன்று (ஆக.16) ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா கைவசம் இன்னும் நான்கு விக்கெட்டுகளே மீதமுள்ளன. 154 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. எப்படியாவது மேற்கொண்டு 100 ரன்கள் அடித்துவிட்டால், டார்கெட் 250 என்று வைக்கலாம். ஸோ, இந்தியா ஓரளவுக்கு இங்கிலாந்திடம் போராடிப் பார்க்கலாம். அட்லீஸ்ட் மேற்கொண்டு 50 ரன்களாவது அடித்தே ஆக வேண்டும். இல்லையெனில், லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு கை நழுவிச் சென்றுவிடும். தற்போது களத்தில் நிற்கும் ஒரே பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மட்டுமே. அவர் அடித்தால் மட்டுமே இந்தியாவால் ஓரளவு கௌரவமான இலக்கை நிர்ணயிக்க முடியும்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

உண்மையை சொல்ல வேண்டுமெனில், நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் புஜாராவும், ரஹானேவும் போராடவில்லை எனில், இந்தியா நேற்றே ஆல் அவுட் ஆகியிருக்கும். 206 பந்துகளை சந்தித்து புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்து ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து 352 பந்துகளை சந்தித்தனர். அதாவது 58 + ஓவர்கள் முழுதாக நின்றிருக்கிறார்கள். உண்மையில் நாம் எழுந்து நின்று கைத்தட்ட வேண்டும். சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாத இருவரும், இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை தங்களால் முடிந்த அளவுக்கு தள்ளிப்போட்டனர்.

அணியைக் காப்பாற்றுமா?

அணியைக் காப்பாற்றுமா?

இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவெனில், தெரிந்தோ, தெரியாமலோ ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் ,எந்த அணிக்கு எதிரான தொடராக இருந்தாலும், அதில் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆம்! டெஸ்ட் தொடரில், 2வது போட்டியில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 57.10.

2வது டெஸ்ட் போட்டியில் இதுவரை மொத்தம் 35 இன்னிங்ஸில் விளையாடி இருக்கிறார்.

ஆவரேஜ் - 57.10*

சதம் - 6

அரைசதம் - 12

அதேசமயம், அந்த 2வது போட்டியைத் தவிர்த்து டெஸ்ட் தொடரின் மற்ற போட்டிகளில் அவரது ஆவரேஜ் 35.27 மட்டுமே.

ஆவரேஜ் - 35.27

சதம் - 6

அரைசதம் - 12

லக் கைக்கொடுக்குமா?

லக் கைக்கொடுக்குமா?

கண்டிப்பாக பிளான் செய்து அவரால் இப்படி ஆடியிருக்கவே முடியாது. அவருக்கே தெரியாமல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது டெஸ்ட் போட்டிகளில் மிக அபாரமாக விளையாடி பல முறை அணியை வெற்றிப் பெறவும் வைத்திருக்கிறார். தோல்வியில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறார். அந்த வகையில், இங்கிலாந்துக்கு எதிரான இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி இந்த தொடரில் 2வது டெஸ்ட் போட்டியாகும். எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடாத ரஹானே இதில் அரைசதம் அடித்திருக்கிறார். இந்தியா தோல்வியில் இருந்து தப்பிக்குமா?

பொறுத்திருந்து பார்க்கலாம்!

Story first published: Monday, August 16, 2021, 20:45 [IST]
Other articles published on Aug 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+