Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தவன் சதத்துல 'சாதம்' வைப்பது தப்பு புரோ.... புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்.!!

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டியை வைத்து மும்பையில் உள்ள புக்கிகள் ரூ. 2000 கோடி அளவுக்கு பெட் வைத்துள்ளனராம்.

சச்சின் கண்டிப்பாக தனது கடைசி போட்டியில் சதமடிப்பார் என்றுதான் பலரும் பெட் கட்டியுள்ளனராம்.

மும்பை முழுவதும் உள்ள புக்கிகள் சச்சினை வைத்து மிகப் பெரிய அளவில் பெட்டிங் மூலம் காசு பார்த்து வருவதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.

இரட்டை சதமா.. சிங்கிள் சதமா...

இரட்டை சதமா.. சிங்கிள் சதமா...

இதுகுறித்து ஒரு புக்கி கூறுகையில், சச்சின் இரட்டை சதம் போடுவார் என்று பலர் பெட் கட்டியுள்ளனர். அதேபோல சதமடிப்பார் என்றும் பலர் பெட் கட்டியுள்ளனர்.

99 சதவீதம் பேருக்கு நம்பிக்கை

99 சதவீதம் பேருக்கு நம்பிக்கை

அவர் சதமடிப்பாரா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இங்குள்ள 99 சதவீத புக்கிகள், சச்சின் கண்டிப்பாக சதமடிப்பார் என்று திடமாக நம்புகின்றனர்.

ஒரு வேளை டக் அவுட் ஆயிட்டா...

ஒரு வேளை டக் அவுட் ஆயிட்டா...

இந்தக் கேள்விக்கே இடமில்லை என்று புக்கிகள் அடித்துச் சொல்கிறார்கள். அதேசமயம், சச்சினுக்கு மேன் ஆப் தி மேட்ச் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் புக்கிகள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

போலீஸ் உஷார்

போலீஸ் உஷார்

இப்படி சச்சினை வைத்து மிகப் பெரிய அளவில் சூதாட்டம் நடப்பது போலீஸாருக்கும் தெரியாமல் இல்லை. புக்கிகளை வளைத்துப் பிடிக்க அவர்களும் உஷாரமாக கண் கொத்திப் பாம்பாக கண்காணித்துக் கொண்டுதான் உள்ளனராம்.

கிடைச்சா நொங்கெடுப்போம்ல..

கிடைச்சா நொங்கெடுப்போம்ல..

இதுகுறித்து மும்பை இணை போலீஸ் கமிஷனர் ஹிமன்ஷு ராய் கூறுகையில், புக்கிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.யாராவது சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு சிக்கினால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

வெளியூரில் இருந்தபடி

வெளியூரில் இருந்தபடி

ஆனால் புக்கிகள் செம வெவரமாத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான புக்கிகள் மும்பையில் இல்லையாம். வெளியூரில் இருந்தபடி பிசினஸை கவனித்து வருகிறார்களாம். பலர் கொல்கத்தாவிலும், டெல்லியிலும் உள்ளனராம். 99 சதவீதம் பேர் மும்பையில் இல்லை என்று கூறுகிறார் ஒரு புக்கி.

அடுத்தவங்க சதத்துல சாதம் வைப்பது தப்பு புரோ....புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்.!

Story first published: Thursday, November 14, 2013, 14:56 [IST]
Other articles published on Nov 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+