Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வந்து விட்டது கடைசி டெஸ்ட்.. வாங்கடேவில் ஜொலிப்பாரா சச்சின்?

மும்பை: இதோ வந்தே வட்டது சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட்.. இன்னும் இரண்டே நாட்கள்தான்.. உலகம் முழுவதும் கோடானு கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் சச்சின் என்ற பிரகாச நட்சத்திரம் தனது பேட்டிங் பட்டொளியை இன்னும் 7 நாட்களில் நிறுத்தி விடப் போகிறது. படபடக்கும் இதயங்களுடன், கண்களில் நீர் தளும்ப கடைசி முறையாக சச்சின் பேட்டிங் செய்வதைப் பார்க்க கனத்த இதயத்துடன் காத்திருக்கும் ரசிகர்களை கடைசி முறையாக குஷிப்படுத்தும் வகையில் வாங்கடே மைதானத்தில் ஜொலிஜொலிக்கும் வகையில் சச்சின் ஆடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு அத்தனை பேரின் இதயங்களிலும் தொக்கி நிற்கிறது.

மும்பை வாங்கடே மைதானம் சச்சினின் சொந்த ஊர் மைதானமாக இருக்கலாம். ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அது அவருக்கு ராசியானதல்ல என்பதை அறியலாம். இதுதான் ரசிகர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

இந்த ராசியை தகர்த்தெறிந்து, சச்சின் அபாரமான ரன் குவிப்பில் ஈடுபட்டு அட்டகாசமாக விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

23 டெஸ்ட்டுக்குப் பிறகே மும்பையில் முதல் டெஸ்ட்

23 டெஸ்ட்டுக்குப் பிறகே மும்பையில் முதல் டெஸ்ட்

சச்சினின் டெஸ்ட் வாழ்க்கையில் மும்பையில் அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியபோது, பல்வேறு மைதானங்களில் அவர் 23 டெஸ்ட் போட்டிகளில் ஆடி முடித்திருந்தார்.

93ல் முதல் போட்டி

93ல் முதல் போட்டி

வாங்கடே மைதானத்தில் சச்சின் முதல் முறையாக 1993ம் ஆண்டு ஆடினார். அது இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியாகும்.

முதல் போட்டியில் சதமடிக்கவில்லை

முதல் போட்டியில் சதமடிக்கவில்லை

மும்பையில் அவர் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடிக்கவில்லை. 78 ரன்களை எடுத்தார். ஆனால் அவரது நண்பரும், சக வீரரமான வினோத் காம்ப்ளி அந்தப் போட்டியில் அபாரமாக ஆடி 224 ரன்களைக் குவித்தார். இத்தனைக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் 165 ரன்களைக் குவித்திருந்தார் சச்சின்.

94ல் 85 ரன்கள் குவிப்பு

94ல் 85 ரன்கள் குவிப்பு

1994ம் ஆண்டு இதே மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுடன் நடந்த போட்டியில் சச்சின் ஆடினார். அப்போட்டியில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும் சச்சின் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆடி 85 ரன்களைக் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அப்போட்டியில் இந்தியா 96 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியிலும் சதமடிக்கவில்லை சச்சின்.

97ல் 4000 ரன்களைக் கடந்தார்.. சதத்துடன்

97ல் 4000 ரன்களைக் கடந்தார்.. சதத்துடன்

1997ல்தான் வாங்கடேவில் சதம் போட்டார் சச்சின். அப்போது இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடினார் சச்சின். அது அவருக்கு 58வது போட்டியாகும். இப்போட்டியில் அவர் சதமடித்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களையும் கடந்தார்.

2000மாவது ஆண்டில் வந்த பேரதிர்ச்சி

2000மாவது ஆண்டில் வந்த பேரதிர்ச்சி

2000மாவது ஆண்டில் வாங்கடே மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்பு பெரும் அவமானத்தை சந்தித்தார் சச்சின். அதாவது அந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் சுருண்டு 113 ரன்களில் நிலைகுலைந்தது. சச்சின் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

2001ல் மீண்டும் அதிர்ச்சி

2001ல் மீண்டும் அதிர்ச்சி

அதேபோல 2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் சச்சின் ஜொலிக்கவில்லை. ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் அரபாரமான ஆட்டத்தால், சச்சினால் ஒரு சதம் கூட போட முடியாமல் போனது. முதல் இன்னிங்ஸில் 76 ரன்களையும், 2வது இன்னி்ங்ஸில் 65 ரன்களையும் அவர் எடுத்தார். இந்திய 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

2011ல் 94 ரன்களில் அவுட்

2011ல் 94 ரன்களில் அவுட்

2011ல் இங்கு நடந்த போட்டியின்போது 94 ரன்கள் எடுத்த நிலையில் ரவி ராம்பால் பந்து வீச்சில் வீழ்ந்தார் சச்சின். அப்போது சச்சின் தனது 100வது சதத்தை எதிர்நோக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்குப் பிறகுதான் சச்சினின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் ரெக்கை கட்டிக் கிளம்பின.

இன்னும் 2 இன்னிங்ஸ்தான்.. என்ன சாதிப்பார் சச்சின்

இன்னும் 2 இன்னிங்ஸ்தான்.. என்ன சாதிப்பார் சச்சின்

தற்போது வாங்கடே மைதானத்தில் அதிகபட்சம் இரண்டு இன்னிங்ஸ் மட்டுமே சச்சின் கையில் உள்ளது. சதமடிப்பாரா.. இந்தியாவுக்கு பிரமாதமான வெற்றியைத் தேடித் தருவாரா... சந்தோஷம் மற்றும் திருப்தியுடன் ஓய்வில் நுழைவாரா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Tuesday, November 12, 2013, 9:06 [IST]
Other articles published on Nov 12, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+