Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய் ஷா தப்பினார்.. ஆனால் கங்குலி? பிசிசிஐ-ன் தலைமை பொறுப்பில் புதிய குழுவா??.. ஆதரவுகள் யாருக்கு?

மும்பை: இந்திய கிரிக்கெட் கவுன்சிலில் மீண்டும் சவுரவ் கங்குலி தலைமை பொறுப்பு ஏற்பதில் சிக்கல் நீடித்துள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வருகிறது.

இதனால் மீண்டும் நடத்தப்படும் தேர்தலில் இவர்கள் இருவரும் மீண்டும் போட்டியிடுவதற்கு இருந்த தடை நேற்றுடன் நீங்கியது.

பிசிசிஐ-ன் தேர்தல்

பிசிசிஐ-ன் தேர்தல்

அதாவது பிசிசிஐ அல்லது மாநில கிரிக்கெட் வாரியங்களில் ஒரு அதிகாரி 6 ஆண்டுகள் பதவியில் இருந்தால், அவரால் மீண்டும் உடனடியாக தேர்தலில் நிற்க முடியாது. 3 ஆண்டுகள் கழித்து தான் போட்டியிட வேண்டும். இந்த விதிமுறைகள் இனி செல்லாது என நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் கங்குலி - ஜெய் ஷா மீண்டும் போட்டியிட எந்தவித பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்தது.

மீண்டும் பழைய கூட்டணி?

மீண்டும் பழைய கூட்டணி?

இதனால் இனி 2025ம் ஆண்டு வரையிலும் கங்குலி - ஜெய் ஷா கூட்டணி தான் இருக்கப்போகிறார்கள் என்ற பேச்சுக்கள் எழத்தொடங்கியுள்ளன. ஆனால் அதில் ஜெய் ஷாவுக்கு மட்டுமே சாதகமான சூழல் உள்ளது. பிசிசிஐ தலைவர் பதவியில் நிற்பதற்கான தகுதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு முன்னாள் வீரர்களும் கங்குலிக்கு மாற்றாக போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள் எனத் தெரிகிறது. பிசிசிஐ நிர்வாகிகள் சிலரும் புதிய தலைமையை எதிர்பார்க்கின்றனர்.

ஜெய் ஷாவுக்கு பச்சைக்கொடி

ஜெய் ஷாவுக்கு பச்சைக்கொடி

ஆனால் ஜெய் ஷாவின் நிலைமை அப்படி இல்லை. இந்தியாவில் 2 பிரிவுகளாக மொத்தம் 28 மாநில கிரிக்கெட் வாரியங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமான 15 வாரியங்களிடம் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் பேட்டி எடுத்துள்ளது. அதில் அந்த 15 மாநில வாரியங்களும் ஜெய் ஷாவுக்கு ஆதரவாக நின்றுள்ளன. அவரே மீண்டும் செயலாளராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

இதன் மூலம் பிசிசிஐ-ன் அடுத்த தேர்தலில் ஜெய் ஷா மீண்டும் செயலாளர் பதவியை பிடிப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் சவுரவ் கங்குலி நீடிப்பாரா என்பது சந்தேகம் தான். கங்குலியின் பதவிக்காலத்தில் விராட் கோலி பதவி விலகல், அணி தேர்வில் தலையிட்டது என பல சர்ச்சைகளில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 15, 2022, 18:32 [IST]
Other articles published on Sep 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+