Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC World cup - 130 கோடி மக்களின் கனவை காப்பாரா கோலி? இது தான் கடைசி வாய்ப்பு.. மான்ஸ்டர் லோடிங்

மும்பை : இந்திய அணி கடைசியாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது 2011 ஆம் ஆண்டு தான். ஐசிசி கோப்பையை அனைத்து வடிவத்திலும் இந்தியா கடைசியாக வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் நாடு என்ற பட்டத்தை வகுத்திருக்கும் இந்தியா அதற்கு தகுந்தார் போல் உலக கோப்பையில் செயல்பட்டதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் பதில் வரும்.

Will Virat kohli fulfill 130 crore People dreams about ICC World cup

50 ஓவர் கிரிக்கெட்டில் 2015 அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் உலக கோப்பையில் தோற்ற இந்திய அணி 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்திடம் அரை இறுதியில் தோல்வியை தழுவியது. இதனால் உலக கோப்பையை இந்தியா இம்முறை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எப்படி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை சச்சின் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தார்களோ அதைப்போல் இம்முறை விராட் கோலியும் ரோகித் சர்மாவும் உலகக்கோப்பை உடன் செல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

காரணம் விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிவிட்டது அடுத்த உலகக்கோப்பை நடைபெறும் போது விராட் கோலிக்கு 38 வயது ஆகிவிடும். அதில் அவர் விளையாடுவது சந்தேகமே இதே போல் ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிவிட்டது. இதனால் அடுத்த நான்கு வருடத்தில் அவருக்கு வயது 40 ஆகிவிடும். இதனால் உலக கோப்பையுடன் இருவரும் செல்ல வேண்டும் என்பதுதான் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

விராட் கோலி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை ஒரு வீரராக வென்று விட்டார். ஆனால் ஒரு முறை வென்றால் அது வெறும் வெற்றி என்று எழுதப்பட்டு விடும் ஆனால் தொடர்ந்து வென்றால்தான் ஒரு வரலாற்றை உருவாக்க முடியும். விராட் கோலி தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை படைத்திருந்தாலும், அணிக்காக அவர் மீண்டும் உலக கோப்பையை வென்று தர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் கடந்த உலக கோப்பையில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதனால் இம்முறை கண்டிப்பாக அவர் சதம் அடித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உலக கோப்பையில் தீவிர பயிற்சி செய்து வருகிறேன் என்று விராட் கோலி கூறியிருப்பது இந்த தொடரை அவர் எப்படி எதிர்நோக்கி இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

நடு வரிசையில் களமிறங்கி அணியை நிலை நிறுத்துவது மட்டுமல்லாமல் ஸ்கோர் வேகத்தையும் உயர்த்த வேண்டும் என்பது இம்முறை விராட் கோலிக்கு கூடுதல் சவாலாக இருக்கும். தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற பெயர் பாபர் அசாமிடம் இருக்கிறது. இதனால் தன்னுடைய சிம்மாசனத்தை மீண்டும் விராட் கோலி பெற உலகக்கோப்பை என்ற மைதானம் அவருக்கு வாய்ப்பாக கிடைத்திருக்கிறது. இதனால் விராட் கோலி என்ற மான்ஸ்டர் இந்த உலகக் கோப்பையில் கலக்கி வெற்றி தேடி தரும் என எதிர்பார்க்கலாம்.

இதனால் தன்னுடைய சிம்மாசனத்தை மீண்டும் விராட் கோலி பெற உலகக்கோப்பை என்ற மைதானம் அவருக்கு வாய்ப்பாக கிடைத்திருக்கிறது. இதனால் விராட் கோலி என்ற மான்ஸ்டர் இந்த உலகக் கோப்பையில் கலக்கி அனுப்பி வெற்றி தேடி தரும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, October 4, 2023, 14:12 [IST]
Other articles published on Oct 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+