Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா நீக்கமா?.. நிருபர் எழுப்பிய சர்ச்சை கேள்வி.. விராட் கோலி கூறிய சுவாரஸ்ய பதில்!

அமீரகம்: இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட வேண்டுமா என்ற நிருபரின் கேள்விக்கு கோலி சுவாரஸ்ய பதில் கூறியுள்ளார்.

Recommended Video

Rohit Sharma-வை நீக்குவீங்களா? நிருபர் கேள்விக்கு Virat Kohli கொடுத்த பதில்

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி தோல்வியடைந்தது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

உலகக்கோப்பை தொடர்களின் வரலாற்றில் இதுவரை பாகிஸ்தான் அணியிடம் இந்தியா ஒரு முறை கூட தோல்வியடைந்ததில்லை என்ற சாதனை இருந்தது. ஆனால் நேற்றைய தினம் அந்த சாதனை தகர்க்கப்பட்டது. இந்திய அணியின் இந்த சொதப்பலுக்கு காரணம் டாப் ஆர்டர் வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடாததே.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

குறிப்பாக ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அனைத்து அயல்நாட்டு அணிகளுடனும் சிறப்பாக விளையாடும் ரோகித் சர்மா, பாகிஸ்தானிடம் மற்றும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சீனியர் வீரராக நேற்று எந்தவித பதற்றமும் இன்றி விளையாடியிருக்க வேண்டிய அவர், அவுட்டானதே பின் வரிசை வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது. எனவே இவரை முக்கிய போட்டிகளில் இனி சேர்க்கக்கூடாது என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 நிருபரின் சர்ச்சை கேள்வி

நிருபரின் சர்ச்சை கேள்வி

இந்நிலையில் இதற்கு கோலி பதிலடி கொடுத்துள்ளார். நேற்று போட்டி முடிந்த பிறகு கோலி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ரோகித் சர்மாவை விட இஷான் கிஷான் ஓப்பனிங் சரியாக விளையாடுவார் என நினைக்கிறீர்களா? அடுத்த போட்டியில் ரோகித் வெளியேற்றப்படுவாரா என கேள்வி எழுப்பினார்.

கோலி பதில்

கோலி பதில்

இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த கேப்டன் கோலி, சர்வதேச டி20 போட்டியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்குவதா?.. நீங்கள் யோசித்து தான் பேசுகிறீர்களா? பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா என்ன செய்தார் என்று நினைவு இருக்கிறதா? உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டுமென தோன்றினால், முன்கூட்டியே கூறிவிடுங்கள். நான் அதற்கேற்ப பதில் தருகிறேன் எனக்கூறினார்.

ரோகித்திற்கு நெருக்கடி

ரோகித்திற்கு நெருக்கடி

இந்திய அணியில் ஏற்கனவே ஓப்பனிங் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய அணியின் அடுத்த டி20 கிரிக்கெட் கேப்டனாக ரோகித் சர்மாதான் பதவியேற்க போகிறார். எனவே அடுத்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி செய்த தவறை திருத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, October 25, 2021, 15:46 [IST]
Other articles published on Oct 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+