Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'பழைய பன்னீர்செல்வமாக' ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவாரா யுவராஜ்சிங்?

பெங்களூர்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சொதப்பலாக விளையாடிய யுவராஜ்சிங் 7வது ஐ.பி.எல். போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும் என்பது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வங்கதேசத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய இந்திய அணியை தோல்விக்குத் தள்ளிவிட்டவர் என்ற பழிசுமந்து கொண்டிருப்பவர் யுவராஜ்சிங். இதனாலேயே அவர் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.

7வது ஐ.பி.எல். போட்டிகளில்..

7வது ஐ.பி.எல். போட்டிகளில்..

இந்த நிலையில் 7வது ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட இருக்கிறார் யுவி.

முக்கியமான கட்டம்

முக்கியமான கட்டம்

இப்போட்டிகளில் தமது முழுத் திறமையை யுவி காட்டினால்தான் அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் இந்திய அணி சார்பில் அவர் பங்கேற்க முடியும்.

அதிக விலைக்குப் போனவர்

அதிக விலைக்குப் போனவர்

அதுவும் ஐ.பி.எல். போட்டிகளில் ரூ14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் யுவி..

பழைய பன்னீர்செல்வமாக..

பழைய பன்னீர்செல்வமாக..

அவரது ஆட்டம் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பெங்களூர் அணி ரசிகர்கள்., எப்படியும் தமது பழைய ஆட்டத்தை யுவி வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்..

யுவி.. நீங்க "பழைய பன்னீர்செல்வமாக" வரனும்..

Story first published: Monday, April 14, 2014, 15:11 [IST]
Other articles published on Apr 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+