ஜாகிர்கானுக்கு திடீர் காயம்-இந்திய அணிக்கு நெருக்கடி

அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது ஜாகிர் கான் பந்து வீசிப் பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஒரு பந்து கூட வீசாமல் அவர் பயிற்சியில் கலந்து கொண்டார். இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருவதாகவும், அவை முடிவடையாமல் உள்ளதால் ஜாகிர் கான் குறித்து இந்திய அணி நிர்வாகம் எந்த முடிவுக்கும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போதைக்கு அவர் ஆடுவதற்கு பொருத்தமானவராக இல்லை என்று அணி நிர்வாகத் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அணி நிர்வாகத் தரப்பில் கூறுகையில், டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை ஒரு வீரர் குறித்து முடிவெடுக்க முடியும். எனவே ஜாகிர் கான் விஷயத்திலும் முடிவெடுக்க அவகாசம் உள்ளது. இப்போதைக்கு அவரை வைத்து ரிஸ்க் எடுக்க யாரும் விரும்பவில்லை என்றனர்.
ஜாகிர் கான் நிலை கலவரமாக தெரிந்தாலும், அணியின் மற்ற வீரர்கள் முனைப்புடன் பயிற்சியில் உள்ளனர். அவர்களுக்கு அணியின் பிசியோபால் சேப்மன் நேற்று பல்வேறு வகையான பிட்னஸ் பயிற்சிகளைக் கொடுத்தார்.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியின்போதுதான் ஜாகிர்கானுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் ஆடவில்லை. நேராக தென் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பி வந்து விட்டார்.
ஒருவேளை ஜாகிர் கான் விளையாட முடியாவிட்டால் உமேஷ் யாதவ் அல்லது ஜெயதேவ் உனக்தத் ஆகியோரில் ஒருவர் அவருக்குப் பதில் இடம் பெறக்கூடும். 2 ஸ்பினர்களுடன் ஆட முடிவு செய்யப்பட்டால் ஹர்பஜனுடன் சேர்ந்து பிரக்யான் ஓஜா இடம் பெறலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications