Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வில்லியம்சன் தி மாஸ்டர்”.. 18 பந்தில் 57 ரன்கள் குவித்த நியூஸி,.. சிறிய ப்ளானால் வந்த பெரும் வெற்றி

அமீரகம்: கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் நியூஸிலாந்து அணி பறித்தது.

Recommended Video

கடைசி நேரத்தில் கைமாறிய வெற்றி.. England-ஐ New Zealand வீழ்த்தியது எப்படி ?

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டி முடிந்து நேற்று முதல் அரையிறுதிப்போட்டிகள் தொடங்கியுள்ளன.

முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து மோதின. இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.

கடின இலக்கு

கடின இலக்கு

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்தில் நிதானமாக ரன்களை சேர்த்தாலும், கடைசி 5 ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ, பட்லர் உள்ளிட்டோர் ஏமாற்ற, பின்னர் வந்த மொயீன் அலி 51 ரன்களும் டேவிட் மாலன் 41 ரன்களும் விளாசினர். இதனால் 20 ஓவர்களில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.

தடுமாறிய நியூஸி

தடுமாறிய நியூஸி

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கப்தில் 4 வீரர்களும், வில்லியம்சன் 5 ரன்களும் எடுத்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த டேர்லி மிட்செல் - டேரன் கான்வே ஆகியோர் நிதானமாக ரன்களை குவித்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் இலக்கை விட மிக நீண்ட தூரத்தில் அவர்களின் ஸ்கோர் இருந்தது.

வில்லியம்சனின் திட்டம்

வில்லியம்சனின் திட்டம்

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்துக்கொண்டிருந்ததால் நிதானமாக விளையாடக்கூறி வில்லியம்சனிடம் இருந்து அவசர தகவல் களத்திற்கு வந்ததாக தெரிகிறது. ஏனென்றால் நிதானமாக விளையாடி முதலில் ரன் உயர்த்த நினைப்பவர் வில்லியம்சன். இதனால் கடைசி 4 ஓவர்களில் (24 பந்துகள்) நியூசிலாந்து அணிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் ஓரளவிற்கு ஸ்கோர் உயர்ந்ததும், பேட்ஸ்மேன்களின் கியரை மாற்றக்கூறி அறிவுரை வந்தது. அதன்படி டேரல் மிட்செல் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் கியரை மாற்றினார். ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது 2 சிக்ஸர்கள் என ரன் மழை பொழிந்தனர்.

கடைசி 4 ஓவர்கள்

கடைசி 4 ஓவர்கள்

ஆட்டத்தின் 17 ஓவரில் ஜோர்டன் வீசிய ஓவரை சந்தித்த நீஷம் ஒரு பவுண்டரி, 2 சிஸ்கர்கள் மற்றும் சிங்கிள்கள் என மொத்தம் 23 ரன்களை விளாசினார். பின்னர் 18 ஓவரில் ரஷித் பந்துவீச்சை எதிர்கொள்ள டேரில் மிட்செல் வந்தார். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்க 14 ரன்கள் சேர்ந்தது. மிட்செலின் அதிரடி கிறிஸ் வோக்ஸையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என மொத்தமாக 20 ரன்களை சேர்க்க கடைசி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணி கடைசி 3 ஓவர்களில் மட்டும் 57 ரன்களை குவித்து அசத்தியது.

Story first published: Thursday, November 11, 2021, 21:38 [IST]
Other articles published on Nov 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+