Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றியோட துவக்கம்... ஆர்சிபியின் வெற்றி.. குதூகலித்த அனுஷ்கா சர்மா

துபாய் : விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

இந்த வெற்றியை நேரிலிருந்து பாராட்ட முடியாத விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Winning Start Anushka Sharma Cheers For Royal Challengers Bangalore

வெற்றியின் துவக்கம் என்ற கேப்ஷனுடன் விராட் கோலி டீம் வெற்றியை கொண்டாடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள அவர் சில சிறப்பு எமோஜிகளையும் வெளியிட்டு தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்துள்ளார்.

விராட் கோலியின் இந்திய அணிக்கான போட்டிகளில் மட்டுமின்றி ஆர்சிபியின் போட்டிகளிலும் அனுஷ்கா சர்மா, பங்கேற்று அவரை நேரில் உற்சாகப்படுத்துவார். இந்நிலையில், அவர் கர்ப்பமாக உள்ளதால், அவர் ஐபிஎல் போட்டிகளில் நேரில் பங்கேற்கவில்லை. ஆயினும் நேற்றைய போட்டியில் ஆர்சிபியின் வெற்றியை அவர் வெற்றியின் துவக்கம் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

ஆர்சிபி அணியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சில சிறப்பு எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டியில் ஆர்சிபி வீரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் அடித்த அரைசதங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஸ்பின்னர் சஹலின் அடுத்தடுத்த 3 விக்கெட்டுகளே வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது மறுக்கவியலாத உண்மை.

Story first published: Tuesday, September 22, 2020, 20:19 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+