'ஜஸ்ட்' 3 தான்.. பிரிச்சு மேஞ்சுரலாம்.. 'தில்'லாக பேசும் ரெய்னா!
மெல்போர்ன்: வெறும் 3 போட்டிகள்தான் நம் முன் இப்போது உள்ளவை. அதை வென்றால் உலகம் நமது கையில் என்று உலகக் கோப்பை குறித்து கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
இந்த மூன்று முக்கியப் போட்டிகளிலும் இந்தியா மிகுந்த கவனத்துடன் ஆடினால் போதும், உலகக் கோப்பையை வெல்லலாம் என்றும் ரெய்னா் கூறியுள்ளார்.

காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி குறித்துத்தான் ரெய்னா இப்படிப் பேசியுள்ளார்.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியின்போது பார்முக்கு வந்தார் ரெய்னா.
- கடைசி லீக் போட்டியில் சிறப்பாக ஆடிய ரெய்னா சதம் போட்டார்.
- சுரேஷ் ரெய்னா முக்கிய கட்டத்தில் பார்முக்குத் திரும்பியிருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- மார்ச் 19ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் வங்கதேசத்தை காலிறுதிப் போட்டியில் இந்தியா சந்திக்கவுள்ளது.
- இந்தப் போட்டியில் ரெய்னாவின் ஆட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது.
- உலகக் கோப்பை குறித்து ரெய்னா கூறுகையில், காலிறுதியை வெல்ல நாங்கள் முனைப்புடன் உள்ளோம். நல்ல அணி நம்மிடம் உள்ளது.
- அனைவரும் சிறப்பாக உள்ளனர், செயல்படுகின்றனர். அனைத்தும் சிறப்பாக நடந்தால், 3 போட்டிகள் மட்டுமே. கோப்பை நமது கையில் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடந்த ஒன்றரை மாதமாக நாம் காட்டி வந்த அனைத்துத் திறமைகளையும் மொத்தமாக வெளிப்படுத்தி ஆடினால் போதும். வெற்றியைத் தொட்டு விடலாம் என்றார் ரெய்னா.
Story first published: Tuesday, March 17, 2015, 13:28 [IST]
Other articles published on Mar 17, 2015


Click it and Unblock the Notifications