Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கடவுளுக்கு' வயது 44! குவிகிறது வாழ்த்துகள்

மும்பை: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 44வது வயதில அடியெடுத்து வைக்கிறார், இதனை அவர் அங்கம் வகிக்கு ஐபிஎல் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி இன்று கொண்டாடுகிறது. சச்சினுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, "ஹேப்பி பர்த் டே பாஜி, கடவுள் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிக்க வேண்டும். எப்போதும் என் கிரிக்கெட் ஹீரோ சச்சினே" என்று கூறியுள்ளார்.

Wishes showering worldwide for star cricketer Sachin Tendulkar on his birthday

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விரேந்திர சேவாக், "இந்தியாவில் காலத்தை நிறுத்தும் மனிதனுக்கு.. ஹேப்பி பர்த் டே சச்சின்" என்று ட்வீட்டியுள்ளார்.

இதே போன்று அனில்கும்ப்ளே, கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும் சச்சினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்: "கிரிக்கெட் கடவுளுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் கண்ட மிகச்சிறந் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களை அடித்த சதங்களின் நாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 24, 2017, 15:21 [IST]
Other articles published on Apr 24, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+