Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்த பீல்டர்களும் பவுண்டரி லைன்ல.. பயமின்றி சிக்சர் அடித்த அதிரடி வீரர்.. மானம் காத்த டிராவிஸ் ஹெட்

லீட்ஸ்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆஷஸ் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டத்தால் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

With a fantastic half century of Travis Head, Australia set a target of 251 runs for Engladn to Win

பின்னர் 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 2ஆம் நாள் முடிவிலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது.

இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டம் நேற்று தொடங்குவதற்கு முன் கனமழை பெய்தது. கிட்டத்தட்ட 4 நேரத்திற்கும் மேலாக ஆட்டம் தடைபட்டதால் 30 ஓவர்கள் வீசலாம் என்று பார்க்கப்பட்டது. இறுதியாக 9 மணிக்கு மேல் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியது. இங்கிலாந்து பவுலர்கள் வீசிய ஒவ்வொரு பந்தும் மின்னல் வேகத்தில் இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பலரும் வருவதும், போவதுமாய் இருந்தனர்.

ஆனால் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் தனியாளாக போராட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக பென் ஸ்டோக்ஸ் பவுண்டரில் அத்தனை ஃபீல்டர்களையும் நிறுத்தினார். குறிப்பாக லெக் சைடு திசையில் ஏராளமான ஃபீல்ஃபர்களை நிறுத்தினார். ஆனால் அவர்களையெல்லாம் கடந்து டிராவிஸ் ஹெட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசிய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து மிரட்டினார்.

இறுதியாக அவரும் 77 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி தரப்பில் இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்துள்ளது. 4ஆம் நாளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 224 ரன்களும், ஆஸ்திரேலிய அணிக்கு 10 விக்கெட்டுகளும் தேவையாக உள்ளது. இதனால் ரசிகர்களிடையே ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, July 9, 2023, 7:51 [IST]
Other articles published on Jul 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+