Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'டோணி கும்பல்' இருக்கும் வரை 'பஜ்ஜி'யால் விளையாட முடியாது.. கங்குலி 'ஷாக்'

கொல்கத்தா: டோணியும், அவருக்கு ஆதரவான தேர்வாளர்களும் இருக்கும் வரை ஹர்பஜன் சிங்கால் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

டோணிதான், ஹர்பஜன் சிங் மீண்டும் அணிக்குத் திரும்புவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

டோணி சொல்வதைத்தான் தேர்வாளர்கள் கேட்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஹர்பஜன் சிங் தனது மறுவருகை குறித்து எப்படி எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

சிங்கிடம் இன்னும் திறமை உள்ளது

சிங்கிடம் இன்னும் திறமை உள்ளது

இதுகுறித்து கங்குலி கூறுகையில், ஹர்பஜன் சிங்கால் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவது சாத்தியம்தான். அவரால் முடியும்.

ஆனால் தேர்வாளர்கள் மனம் வைக்கவில்லையே

ஆனால் தேர்வாளர்கள் மனம் வைக்கவில்லையே

ஆனால் தேர்வாளர்கள் அதுகுறித்து சிந்திப்பதே இல்லை. அவர்கள் கேப்டன் கூறுவதை மட்டுமே கேட்கிறார்கள். அவருடைய ஆதரவாளர்களதான் தேர்வாளர்ளாக உள்ளனர். பிறகெப்படி ஹர்பஜன் சி்ங் மீண்டும் விளையாடுவது குறித்து சிந்திக்க முடியும்.

அமில் மிஸ்ரா லாயக்கில்லை

அமில் மிஸ்ரா லாயக்கில்லை

ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை டுவென்டி 20 ஆகியவற்றுக்கு அமித் மிஸ்ராவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் அது பலன் தராது. ஹர்பஜன் சிங்கை சேர்த்திருக்க வேண்டும். அல்லது பிரக்யான் ஓஜாவை சேர்த்திருக்கலாம் என்றார் கங்குலி.

கடைசியாக 2013ம் ஆண்டில்

கடைசியாக 2013ம் ஆண்டில்

கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் போட்டியில்தான் ஹர்பஜன் விளையாடினார். அதன் பின்னர் ஆறு ரஞ்சிப் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 23 விக்கெட்ளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

தற்போது இந்திய அணியில் அஸ்வின் ஆதிக்கம்தான் உள்ளது. அவருக்கு டோணியின் முழு ஆதரவும் உள்ளதால் அஸ்வின் நீடிக்கிறார். ஆனால் அஸ்வின் பந்து வீச்சும் கூட சமீப காலமாக விமர்சனத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 27, 2014, 12:09 [IST]
Other articles published on Feb 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+