Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கார்த்திக் மீண்டும் கேப்டன் இன்னிங்ஸ்.... ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா. இதன் மூலம் புள்ளிப் பட்டியில் 3வது இடத்துக்கு கொல்கத்தாவும், 4வது இடத்துக்கு ராஜஸ்தானும் முன்னேறின.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் 48 ஆட்டங்கள் முடிந்து விட்டன. லீக் போட்டிகளில் இன்னும் 8 ஆட்டங்களே பாக்கி உள்ளன.

இந்த சீசனில் இதுவரை அனைத்து அணிகளும் தலா 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அடுத்து நடைபெறும் 8 ஆட்டங்களே, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை உறுதி செய்யும்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 18 புள்ளிகள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

5 அணிகள் போட்டி

5 அணிகள் போட்டி

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற உள்ள மற்ற இரண்டு அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாகாவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. அதே நேரத்தில் 10 புள்ளிகளுடன் உள்ள மும்பை, பெங்களூர் அணிகளுக்கும் இன்னும் வாய்ப்பு உள்ளது. டெல்லிக்கு மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

சான்ஸ் போனா வராது

சான்ஸ் போனா வராது

அடுத்து விளையாடும் 2 ஆட்டங்களிலுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் 5 அணிகளும் உள்ளன. இதில் கொல்கத்தாவும், ராஜஸ்தானும் கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோல்வி அடைந்தால், பிளே ஆப் வாய்ப்பை பெறுவது மிகவும் கஷ்டம்.

இக்கட்டான நிலை

இக்கட்டான நிலை

அடுத்து விளையாடும் ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியடைந்தாலும் மற்ற அணிகள் தவறு செய்தால் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் கொல்கத்தா அணி அடுத்ததாக மிகவும் வலுவான ஹைதராபாத் அணியுடன் மோதுகின்றது. அதே நேரத்தில் ராஜஸ்தான் பெங்களூரை சந்திக்கும். அதனால் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் இரு அணிகளும் உள்ளன.

கேப்டன் இன்னிங்ஸ்

கேப்டன் இன்னிங்ஸ்

கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டை வீழ்த்தினார். கொல்கத்தா 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தினேஷ் கார்த்திக் 41 ரன்கள் எடுத்து கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். ராஜஸ்தானின் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

14 புள்ளிகளுடன் கொல்கத்தா புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 4வது இடத்தில் உள்ளது.

Story first published: Tuesday, May 15, 2018, 23:47 [IST]
Other articles published on May 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+