For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை.. எங்க சென்னை.. கெத்து தான்..! புள்ளிகள் பட்டியலில் முதலிடம்.. தோனிக்கு விசில் போடு

Recommended Video

IPL 2019 Points Table: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சென்னை அணி- வீடியோ

சென்னை:ராஜஸ்தானை வென்றதன் மூலம் சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இடத்துக்கு கெத்தாக முன்னேறி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.

With the win of rajasthan, chennai super kings has progressed to the first place in the current ipl series

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரகானே ரன் ஏதும் எடுக்காமலும், ஜோஸ் பட்லர் 6 ரன்களிலும் வெளியேறினர். சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவதாக களமிறங்கிய ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி 39 ரன்கள் எடுத்தார். ஸ்டீவன் ஸ்மித் 28 ரன்களில் வெளியேறினார்.

5வதாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர், இறுதி ஓவரில் ப்ராவோ வீசிய முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மீதமுள்ள 5 பந்துகளில் 12 எடுக்கவேண்டிய நிலையிருந்தது. ஜோப்ரா ஆர்ச்ர் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் களத்தில் நின்றனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து, சென்னை அணி போட்டியிட்ட 3 போட்டிகளும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

அணி
போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
சென்னை 3 3 0 6
ஹைதராபாத் 3 2
1 4
கொல்கத்தா 3 2
1 4
டெல்லி 3 2
1 4
பஞ்சாப் 3 2
1 4
மும்பை 3 1
2 2
ராஜஸ்தான் 3 0
3 0
பெங்களூர் 3 0
3 0
Story first published: Monday, April 1, 2019, 12:36 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
With the win of Rajasthan, the Chennai team has progressed to the first place in the current IPL series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+