துரத்தி அடிக்கும் மத சாயம்.. ஜாஃபருக்காக குரல் கொடுத்த பிரபலம்.. வாயடைக்க செய்த ஒற்றை ட்வீட்!
உத்தர்காண்ட்: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் மீது வைக்கப்பட்டுள்ள மத ரீதியாக புகாருக்கு எதிராக அனில் கும்ளே குரல் கொடுத்துள்ளார்.
உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வாசிம் ஜாபர் பதவி விலகி இருக்கிறார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடருக்காக வீரர்கள் தயாராகி வந்த நிலையில் திடீரென ஜாஃபர் பதவி விலகியுள்ளார்.
வசீம் ஜாஃபர், தான் எதற்காக பதவி விலகினேன் என விளக்கம் அளிப்பதற்கு முன்னரே அவர் மீது மதம் சார்ந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் ராஜினாமா
இந்திய அணியின் முன்னாள் வீரரான வசீம் ஜாஃபர் உத்தரகாண்ட் மாநில அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். விஜய் ஹாசாரே தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வசீம் ஜாஃபர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இது ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் அதிர்ச்சியளித்தது.

விளக்கம்
திடீரென ராஜினாமா செய்தது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், அணியில் வீரர்கள் தேர்வில் குளறுபடி நடப்பதாகவும் தனது முடிவுக்கு அணியில் மதிப்பளிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

பரபரப்பு குற்றச்சாட்டு
வசீம் ஜாஃபரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உத்தர்காண்ட் மாநில கிரிக்கெட் வாரியம், ஜாஃபர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வீரர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ட்ரஸ்ஸிங் ரூம்மை மதக்கூடமாக மாற்றியவர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அனில் கும்ளே ஆதரவு
வசீம் ஜாஃபர் மீது வைக்கப்பட்டுள்ள மத ரீதியான புகார்களுக்கு எதிராக ரசிகர்கள் மற்றும் வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே களத்தில் இரங்கியுள்ளார். அவர்,நான் உன்னுடன் இருக்கிறேன் வசீம், நீங்கள் எடுத்தது சரியான முடிவுதான். அந்த அணி வீரர்களுக்கு உங்களின் ஆலோசனை பெற கொடுத்து வைக்கவில்லை, என ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications