For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ரா, புவி இல்லைனா டீம் கவுந்துரும் போலையே.. கணக்கு போட்டு பார்த்தா தலை சுத்துது

மும்பை : இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா தான் வேகப் பந்துவீச்சின் ஆணி வேராக இருக்கின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அவர்கள் இருவரும் ஆடாத நிலையில், இந்திய அணி வேகப் பந்துவீச்சில் தடுமாறியது.

புவனேஸ்வர் குமார், பும்ரா இல்லாத இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு எப்படி தான் இருக்கிறது?

புவி, பும்ரா இல்லாத இந்திய அணி

புவி, பும்ரா இல்லாத இந்திய அணி

புவனேஸ்வர் குமார், பும்ரா இல்லாமல், கடந்த ஜனவரி 2017இல் இருந்து 7 போட்டிகளில் மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டும் இந்திய அணியில் பந்து வீசி இருக்கிறார்கள். இந்த ஏழு சந்தர்ப்பங்களில், 2 முறை மட்டுமே வேகப் பந்துவீச்சில் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கும் குறைவாக ரன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும், பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரானது. மற்ற ஐந்து முறையும் 6 ரன்களுக்கு மேல் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்திய வேகப் பந்துவீச்சில் யார்?

இந்திய வேகப் பந்துவீச்சில் யார்?

புவி, பும்ரா இல்லாமல் இந்திய அணிக்கு வேகப் பந்துவீச்சில் எராளமான வீரர்கள் அணியில் தற்காலிகமாக இருக்கிறார்கள். இவர்கள் யாரும் தொடர்ந்து வாய்ப்பு பெறவில்லை. அதற்கு காரணம், அவர்களது பந்துவீச்சு நிலையாக இல்லாதது தான். இதில் பண்டியா ஆல்-ரவுண்டர் என்ற தகுதியில் அணியில் இருக்கிறார். அவரை விடுத்து பார்த்தால், முகமது ஷமி, உமேஷ் யாதவ், கலீல் அஹ்மது, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், சித்தார்த் கவுல் என குறைந்த பட்சம் ஆறு வீரர்கள் சமீப காலங்களில் இந்திய அணிக்கு ஆடி இருக்கிறார்கள். இப்போதும், இந்திய அணி தேர்வாளர்களின் விருப்பப் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் இந்திய அணியில் மாற்றி மாற்றி இடம் பிடித்து வருகின்றனர்.

மற்ற வீரர்கள் செயல்பாடுகள் எப்படி?

மற்ற வீரர்கள் செயல்பாடுகள் எப்படி?

இவர்கள் ஜனவரி 2017 முதல் இந்திய அணிக்கு பந்துவீசி ஓவருக்கு எத்தனை ரன்கள் கொடுத்து இருக்கிறார்கள் என பார்க்கலாம். உமேஷ் யாதவ் 12 போட்டிகளில் பந்துவீசி 18 விக்கெட்கள் எடுத்து, சராசரியாக ஓவருக்கு 6.02 ரன்கள் கொடுத்து இருக்கிறார். ஷர்துல் 5 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்கள் எடுத்து, சராசரி ரன் விகிதம் 6.08 வைத்து இருக்கிறார். ஷமி 4 போட்டிகள் ஆடி 6 விக்கெட்களும், சராசரி 5.60யும், கலீல் அஹ்மது 3 போட்டிகள் ஆடி 5 விக்கெட்கள் வீழ்த்தி, சராசரி 5.23 வைத்து இருக்கிறார். தீபக் சாஹர் ஒரு போட்டியில் 4 ஓவர்கள் மட்டுமே வீசி ஓவருக்கு 9.25 ரன்கள் கொடுத்து இருக்கிறார். சித்தார்த் கவுல் 3 போட்டிகள் ஆடி விக்கெட்டே வீழ்த்தாமல், அதிக ரன்கள் கொடுத்து இருக்கிறார்.

நம்பிக்கை அளிப்பது யார்?

நம்பிக்கை அளிப்பது யார்?

இந்த பட்டியலில் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் இரண்டு வீரர்கள் கலீல் அஹ்மது மற்றும் ஷமி மட்டுமே. கலீல் அஹ்மது ஒரு போட்டியில் மட்டுமே கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். ஷமி ஓரளவு அனுபவம் பெற்றவராக இருக்கிறார். அவரால் ஒரே மாதிரியான பந்துவீச்சை தொடர முடிவதில்லை என்பதே பெரிய பிரச்சனையாக உள்ளது.

புவி, பும்ரா நிச்சயம் வேண்டும்

புவி, பும்ரா நிச்சயம் வேண்டும்

இந்தியாவின் சிறந்த வேகப் பந்துவீச்சு கூட்டணி என்று பார்த்தால், புவி, பும்ரா மற்றும் பண்டியா தான். பும்ரா 4.78 சராசரியோடு 33 போட்டிகளில் 55 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். புவி 35 போட்டிகளில் 36 விக்கெட்கள் வீழ்த்தி, 5.10 சராசரி வைத்து இருக்கிறார். விக்கெட்கள் அதிகம் வீழ்த்தாவிட்டாலும் நிலையான அச்சுறுத்தும் வகையில் பந்து வீசுகிறார் புவனேஸ்வர். பண்டியாவின் சராசரி 5.57 என இருப்பது சற்று அதிகம் தான் என்றாலும், அவர் பேட்டிங் பலத்தை பகுதி நேர பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா இல்லையென்றால், இந்திய அணி பந்துவீச்சில் பலவீனமான அணியாகவே இருக்கும்.

Story first published: Saturday, October 27, 2018, 21:26 [IST]
Other articles published on Oct 27, 2018
English summary
Without Bumrah and Bhuvaneswar Kumar Indian pace bowling is weak
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X