Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னே உடலை பின் தொடர்ந்த பெண்.. சுற்றி வளைத்த தாய்லாந்து போலீசார்.. உடல் ஆய்வின் போது பரபரப்பு!

தாய்லாந்து: ஷேன் வார்னேவின் உடல் கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்ஸை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பின் தொடர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் என்ற தீவுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.

கடந்த மார்ச் 4ம் தேதியன்று மாலை விடுதி அறையிலேயே வார்னே மாரடைப்பால் காலமானார். இவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் கிளம்பின.

அதிகரித்த சந்தேகங்கள்

அதிகரித்த சந்தேகங்கள்

ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் பல இடங்களில் ரத்தக்கறைகள் இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். எனினும் அது முதலுதவி அளிக்கப்பட்ட போது, ரத்த வாந்தி எடுத்தார் என அவரது நண்பர்கள் வாக்குமூலம் அளித்தனர். மேலும் வார்னே உடல் எடையை குறைப்பதற்காக இருந்த கடினமான டயட்களும் மாரடைப்புக்கு காரணம் எனக் கூறப்பட்டது.

அடையாளம் தெரியாத பெண்

அடையாளம் தெரியாத பெண்

இதனையடுத்து அவரின் உடலை பரிசோதிக்க நேற்று கோ சாமுய் தீவில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸின் பின் புறம் ஒரு தாய்லாந்து பெண்ணும், அயல்நாட்டு பெண் ஒருவரும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி, மருத்துவமனை வளாகத்தில் அந்த பெண்ணை சுற்றி வளைத்தனர்.

 கடைசியில் என்ன ஆனது

கடைசியில் என்ன ஆனது

அதன்பின்னர் தான், அந்த பெண் வார்னேவுக்கு தெரிந்தவர் என்றும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வந்ததாகவும் தெரியவந்தது. அவருடன் இருந்த தாய்லாந்து பெண் உதவியாளர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பெண் வார்னே உடல் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்குள் ஒரு நிமிடம் இருக்க அனுமதிக்கப்பட்டார். ஒரு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு அனுப்பி வைக்கப்பட்டார்.

Recommended Video

அறை முழுவதும் ரத்தக் கறைகள்.. Shane Warne மரணத்தில் மர்மம்?
வெளியான உண்மை

வெளியான உண்மை

இப்படி ஒரு பரபரப்பு நடந்து முடிந்த நிலையில், ஷேன் வார்னே இயற்கையாக தான் உயிரிழந்துள்ளார் மருத்துவர்கள் அடாப்சி ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதனையடுத்து வார்னேவின் உடல் பாங்காக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Story first published: Tuesday, March 8, 2022, 17:32 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+