சஹல் கீழே குனிய.. செல்லமாக கன்னத்தைப் பிடித்து இழுத்து.. யாரும்மா.. என்ன விளையாட்டு இது!
மும்பை: ஊரே கொரோனா வைரஸ் பாதிப்பால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு கிடக்கிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹல் போட்டுள்ள ஒரு டிக்டாக் வீடியோ பரபரப்பாக வைரலாகியுள்ளது.
கொரோனாவைரஸ் பீதி காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்தாகி விட்டன. மார்ச் 31ம் தேதி வரை ஒரு போட்டியையும் நடத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவே போட்டு விட்டது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சஹல் போட்டுள்ள ஒரு டிக்டாக் செம வைரலாகியுள்ளது. பாரக்கவே படு தமாஷாகவும், ரொமான்ட்டிக்காகவும் உள்ளது.

சஹல் வெளியிட்ட டிக்டாக் வீடியோ
போட்டிகள் எதுவும் இல்லாததால் டிக்டாக் களத்தில் இறங்கி விட்டார் சஹல். அவரது வீடியோக்களுக்கு எப்போதுமே நல்ல கிராக்கி உண்டு. அந்த வகையில் இந்த வீடியோவும் வைரலாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் சஹலுடன்ஒரு பெண் உள்ளார். அவர் யார் என்று தெரியவில்லை. வீடியோ முழுக்க சிரித்தபடி வலம் வருகிறார் அப்பெண். மேலும் சஹலும் அவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டே உள்ளனர். காதலா என்னான்னு தெரியலை.

சஹலுடன் யார் அந்த பெண்
வீடியோவின் இடையில் சஹல் குனிந்து தனது ஷூவின் லேஸை சரி செய்கிறார். அப்போது அந்தப் பெண் சஹலுக்குப் பின்னால் போய் மறைந்து கொள்கிறார். நிமிர்ந்து சஹல் எழும்போது அப்பெண்ணைக் காணாமல் தேடுகிறார். அப்பெண்ணோ போக்கு காட்டுகிறார். இப்படியாக போய் கடைசியில் சஹலுக்கு முன்பு வந்து நிற்கிறார். இதைப் பார்த்து சஹல் அட என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார்.

கன்னத்தைப் பிடித்து இழுத்து விளையாட்டு
அப்போது அந்தப் பெண் மெதுவாக வந்து சஹலின் இரு கன்னத்தையும் பிடித்து மெல்லமாக கிள்ளி விளையாடுகிறார். சஹலும் அப்பெண்ணை செல்லமா குத்த கை ஓங்குகிறார். அப்பெண்ணோ சிரித்தபடி விலகி ஓடுகிறார். இப்படியாக போகிறது அந்த வீடியோ. டிக்டாக்கில் சஹல் தோன்றுவது இது முதல் முறையல்ல. இதுபோல ஏகப்பட்ட வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
வீரர்களுக்கு நல்ல ரெஸ்ட்
சஹல் கடைசியாக நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியிருந்தார். அதில் டி20 தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்றது. ஆனால் ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. ஐபிஎல் போட்டிகளில் சஹல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடுகிறார். தற்போது ஐபிஎல் தொடர் தள்ளிப் போயுள்ளதால் சஹல் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ஓய்வில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications