Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை.. இந்தியாவுக்கு சிக்கல்.. நெதர்லாந்திடம் தோல்வி.. அரையிறுதி போக முடியுமா?

ஆம்ஸ்டெல்வீன்: 2026 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு தற்போதைக்கு மங்கியுள்ளது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்து அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இப்போட்டியில் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்சியிலும், நெதர்லாந்து வெளிர் நீல நிற ஜெர்சியிலும் களம் கண்டன. ஆட்டத்தின் 2 வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீராங்கனை யிபி ஜான்சென் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார்.

Women Hockey World Cup Netherlands Defeats India 2-0 to Dim Semi-Final Hopes

ஆட்டத்தின் 5 வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை இந்திய கோல்கீப்பர் பிச்சு தேவி சிறப்பாகத் தடுத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது கால் பகுதியில் களம் கண்ட சவிதா புனியாவும் அபாரமாகச் செயல்பட்டு நெதர்லாந்தின் ஃபெலிஸ் ஆல்பெர்ஸ் மற்றும் பியன் டிக்கே ஆகியோரின் கோல் முயற்சிகளை முறியடித்தார். ஆனால், ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் ஃப்ரெடெரிக் மாட்லா மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி நெதர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் மற்றும் கவுண்டர் அட்டாக் மூலம் சில வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக தீபிகாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும், சுனேலிதா டோப்போவின் கோல் முயற்சியையும் நெதர்லாந்து அணி தடுத்து நிறுத்தியது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் நவநீத் அடித்த பந்தை நெதர்லாந்து கோல்கீப்பர் ஆன் வீனெண்டால் தடுத்து நிறுத்தினார்.

இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் 1 புள்ளியுடன் மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் நெதர்லாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மரினே மற்றும் நெதர்லாந்து பயிற்சியாளர் ரவுல் எஹ்ரன் ஆகிய இரு நண்பர்களுக்கு இடையிலான இந்த மோதலில் நெதர்லாந்தின் கையே ஓங்கியது.

உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தங்களது இறுதிப் போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, August 22, 2026, 8:25 [IST]
Other articles published on Aug 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+