For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் டி20 சேலஞ்ச் 2020 : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணி வெற்றி

ஷார்ஜா : யூஏஇயில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 சேலஞ்ச் 2020 தொடரில் நேற்றைய போட்டியில் வெலாசிட்டி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாசை வெற்றி கொண்டுள்ளது.

வெலாசிட்டி அணியின் கேப்டன் மிதாலி ராஜ் டாஸ் வென்று பௌலிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதையடுத்து விளையாடிய சூப்பர்நோவாஸ் அணி 126 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

வெலாசிட்டி அணி வெற்றி

வெலாசிட்டி அணி வெற்றி

நேற்றைய மகளிர் டி20 சேலஞ்ச் 2020 தொடரின் போட்டியில் வெலாசிட்டி மற்றும் சூப்பர்நோவாஸ் அணிகள் மோதின. இதில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணி 126 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

ஜெமிமா ஏமாற்றம்

ஜெமிமா ஏமாற்றம்

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில், சூப்பர்நோவாஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் பிரியா புனியா மற்றும் சமாரி அத்தப்பட்டு ஆகியோர் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினர். முதல் 5.2 ஓவர்களில் இவர்கள் 30 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் அடித்தனர். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார்.

பார்ட்னர்ஷிப்பில் 47 ரன்கள்

பார்ட்னர்ஷிப்பில் 47 ரன்கள்

இதையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அத்தப்பட்டுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 47 ரன்களை குவித்ததன்மூலமே அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை அடித்திருந்தது. அத்தப்பட்டு அதிகப்பட்சமாக 44 ரன்களை அடித்திருந்தார்.

ஆலம், காஸ்பெரக் 2 விக்கெட்டுகள்

ஆலம், காஸ்பெரக் 2 விக்கெட்டுகள்

வெலாசிட்டியின் ஸ்பின்னர் ஏக்தா பிஸ்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஜஹானரா ஆலம் மற்றும் காஸ்பெரக் முறையே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதையடுத்து வெலாசிட்டி அணி விளையாடிய நிலையில், அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தனர்.

சுனே லூவஸ் சிறப்பு

சுனே லூவஸ் சிறப்பு

டானி வியாட் டக்-ஆவுட் ஆன நிலையில், அடுத்தடுத்து வந்த ஷபாலி வர்மா மற்றும் கேப்டன் மிதாலி ராஜூம் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் அடுத்துவந்த வேதா கிருஷ்ணமூர்த்தியின் 29 ரன்கள் அடுத்தடுத்து வந்த வீராங்கனைகளுக்கு நம்பிக்கை அளித்தது. சுனே லூவஸ் 21 பந்துகளில் அடித்த 37 ரன்கள் அந்த அணி வெற்றி பெற காரணமாக இருந்தது.

Story first published: Thursday, November 5, 2020, 11:01 [IST]
Other articles published on Nov 5, 2020
English summary
Luus was the star of the night for Velocity, smashing 37 runs off 21 deliveries
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+