மகளிர் டி20 சேலஞ்ச் இறுதிப் போட்டி.. கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பு.. வென்றது யார்?
Recommended Video
ஜெய்ப்பூர் : மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில் வெலாசிட்டி அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சூப்பர்நோவாஸ் அணி.
இந்தப் இறுதிப் போட்டியில் வெலாசிட்டி அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட்கள் இழப்பிற்கு, 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்வுமன்கள் வரிசையாக விக்கெட்களை இழக்க 8வது ஓவரில் 37 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது.

பின்னர் சேஸிங் செய்த சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சூப்பர்நோவாஸ். அப்போது ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராதா யாதவ் இரண்டு, இரண்டு ரன்களாக ஓடினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஃபோர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் ராதா யாதவ். மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் கோப்பையை வென்றது சூப்பர்நோவாஸ் அணி.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன், பரிசோதனை முறையில் நடைபெற்ற மகளிர் டி20 தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications