Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை பைனலில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த பெத் மூனி.. டி20 உலகக்கோப்பையில் புதிய வரலாறு

லண்டன்: 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அசத்திய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பெத் மூனி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் இமாலய சாதனை ஒன்றை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இங்கிலாந்து நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய பெத் மூனி 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாசினார். அவர் லிட்ச்பீல்டுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தார்.

Women T20 World Cup Final Beth Mooney Shatters Virat Kohli s World Cup Record with Half-Century

இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் (ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகள் இணைந்து) இறுதிப்போட்டியில் 3 முறை 50-க்கும் மேல் ரன்கள் (அரைசதம்) கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பெத் மூனி படைத்துள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி (2 போட்டிகளில் 2 அரைசதங்கள்), மார்லன் சாமுவேல்ஸ் (2 போட்டிகளில் 2 அரைசதங்கள்) மற்றும் குமார் சங்கக்காரா (3 போட்டிகளில் 2 அரைசதங்கள்) ஆகியோர் தலா 2 அரைசதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

முன்னதாக, பெத் மூனி 2020 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 78 ரன்களும், 2023 இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் குவித்திருந்தார். மேலும், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் (230 ரன்கள்) அவர் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் மெக் லானிங் (175 ரன்கள்) இரண்டாவது இடத்திலும், மார்லன் சாமுவேல்ஸ் (163 ரன்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 153 ரன்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

சஞ்சு சாம்சனை நீக்கியதில் தப்பே இல்லை.. வைபவ் சூர்யவன்ஷியால் அம்பலமான கசப்பான புள்ளிவிவரம்

சஞ்சு சாம்சனை நீக்கியதில் தப்பே இல்லை.. வைபவ் சூர்யவன்ஷியால் அம்பலமான கசப்பான புள்ளிவிவரம்

இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனிக்கு ஆட்டநாயகி விருதும், உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்காக தொடர்நாயகி விருதும் வழங்கப்பட்டது.

Story first published: Monday, July 6, 2026, 9:20 [IST]
Other articles published on Jul 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+