Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டி... ஆஸியை ஓட ஓட விரட்டிய இந்திய மகளிர்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இன்று முதல் துவங்கியுள்ள ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய மகளிர் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையின் வெற்றியாளரான ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா இன்று மோதியது. தொடரின் முதல் போட்டியான இதில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூனம் யாதவ் எடுத்த 4 விக்கெட்டுகளின் அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் துவக்க வீராங்கனை சிறப்பாக ஆடிய போதும் அந்த அணியின் மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

 இந்தியா -ஆஸ்திரேலியா மோதல்

இந்தியா -ஆஸ்திரேலியா மோதல்

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்றுமுதல் துவங்கி வரும் மார்ச் 8ம் தேதி பெண்கள் தினத்தன்று முடிவடையவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதியது.

 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சிட்னியின் ஷோகிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை குவித்தது. சபாலி வர்மா 15 பந்துகளுக்கு 29 ரன்களையும் தீப்தி வர்மா 46 பந்துகளுக்கு 49 ரன்களையும் அடித்திருந்தனர். சபாலி வர்மா 6 பவுண்டரிகளையும் ஒரு சிக்சையும் அடித்தார்.

 இந்தியாவின் ரன்கள் குறைப்பு

இந்தியாவின் ரன்கள் குறைப்பு

இதையடுத்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜெஸ் ஜோனாசன், 24 ரன்களை கொடுத்து அடுத்தடுத்து இந்திய அணியின் இரு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்தியா 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து ஆடிய தீப்தி வர்மா 49 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ரன்களையும் அடித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர்.

 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பூனம்

4 விக்கெட்டுகளை வீழ்த்திய பூனம்

அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் அலிசா ஹீலி 35 பந்துகளில் 51 ரன்களை அடித்து சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி தந்த போதிலும், இந்திய பௌலர் பூனம் யாதவின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து அந்த அணியின் வீராங்கனைகள் சரிந்தனர். இதையடுத்து 19.5 ஓவர்களில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிக் கொண்டுள்ளது.

 பிப்ரவரி 24ல் நடைபெறுகிறது

பிப்ரவரி 24ல் நடைபெறுகிறது

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில் அடுத்ததாக இந்திய அணி வரும் 24ம் தேதி பெர்த்தில் வங்கதேசத்துடன் மோதவுள்ளது. வரும் 8ம் தேதி இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தியா எந்த நெருக்கடியும் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று இந்தியாவின் முன்னாள் மகளிர் டி20 கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 22, 2020, 9:21 [IST]
Other articles published on Feb 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+