Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் டி20 உலக கோப்பை : ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக அறிவிப்பு

டெல்லி : ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்மன்பிரீத் கவுர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் ரிச்சா கோஷ் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஷபாலி வர்மாவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இம்மாத இறுதியில் துவங்கி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ள 3 நாடுகள் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்

ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சபாலி வர்மாவும் இடம்பிடிப்பு

சபாலி வர்மாவும் இடம்பிடிப்பு

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை அணியில் ரிச்சா கோஷ் என்ற வீராங்கனை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல முதல்முறையாக ஐசிசி தொடரில் சபாலி சர்மாவும் இடம்பிடித்துள்ளார்.

குரூப் பி அணியில் பாகிஸ்தான்

குரூப் பி அணியில் பாகிஸ்தான்

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசமும் இதேபோல பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணிகள் பங்கேற்கவுள்ளன.

மகளிர் அணி அறிவிப்பு

மகளிர் அணி அறிவிப்பு

இதனிடையே ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் துவங்கவுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா பங்கேற்கும் 3 அணிகள் தொடருக்கான 16 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை நுசாத் பர்வீனும் இடம்பெற்றுள்ளார்.

இந்த மகளிர் அணி

இந்த மகளிர் அணி

உலக டி20 தொடருக்கான மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், தனியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Story first published: Sunday, January 12, 2020, 18:00 [IST]
Other articles published on Jan 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+