
சொதப்பல் பேட்டிங்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் விளையாடப்போகிறோம் என்ற பதற்றத்துடன் இருந்தனர். . இதன் காரணமாக, இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை சம்மாரி அட்டப்பட்டு, அனுஸ்கா ஆகியோர் ரன் அவுட்டாகி வெளியேற, இலங்கைக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள், இந்திய பந்துவீச்சை கொஞ்சம் கூட சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

65 ரன்கள்
ஹர்சிதா ஒரு ரன்னிலும், ஹாசினி டக் அவுட்டாகியும், அனுஸ்கா ரன் அவுட்டாகியும், 4வது ஓவரில் இலங்கை அணி தொடர்ந்து 3 விக்கெட்டுகளை இழந்தது 9 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த இலங்கை அணியால், கொஞ்சம் கூட மீண்டு எழ முடியாத படி இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். செல்போன் நம்பர் போல் இலங்கை வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து. ஆட்டமிழந்தனர்.

இந்தியா பேட்டிங்
இலங்கை அணியில் இனோகா ரன்வீரா அதிகபட்சமாக 18 ரன்களும், ரனசிங்கே 13 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது, இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 3 ஓவர் வீசி 5 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் செஃபாலி வெர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஸ்மிருதி மந்தனா அரைசதம்
இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஜேமிமா 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 11 ரன்கள் எடுக்க, இந்திய மகளிர் அணி வெற்றி இலக்கை 8.3வது ஓவரில் எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications











