Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

35 ரன்களுக்கு 5 விக்கெட்.. தடுமாறிய இந்திய அணி.. இங்கிலாந்து மகளிர் அணி கொடுத்த ஷாக்

பிரிஸ்டல் : இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டியை இழந்த இந்திய மகளிர் அணி, 2வது டி20 போட்டியை வென்றது. இதனையடுத்து தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் இரு அணி வீராங்கனைகளும் பலப்பரீட்சை நடத்தினர்.

பிரிஸ்டல் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

35 ரன்களுக்கு 5 விக்கெட்

35 ரன்களுக்கு 5 விக்கெட்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனைகள், இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக, கடந்த ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய ஸ்மிருதி மந்தானா, இன்றைய ஆட்டத்தில் 9 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செஃபாலி வர்மா 5 ரன்களிலும், மேக்னா, ஹேமலதா ஆகியோர் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

122 ரன்கள்

122 ரன்கள்

அணியை காப்பற்றுவார் என ரசிகர்கள் நினைத்த கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், 5 ரன்களில் வெளியேற, இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து தடுமாறியது. இறுதியில் தீப்தி சர்மா 24 ரன்களும், ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 33 ரன்களும் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இங்கிலாந்து தொடக்கம்

இங்கிலாந்து தொடக்கம்

123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சோபியா 44 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக டேனி வியாட் 22 ரன்கள் சேர்க்க, இளம் வீராங்கனை கேப்ஸி அதிரடியாக விளையாடி 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஜோன்ஸ் 3 ரன்களில் வெளியேறினார்.

தொடரை இழந்தது இந்தியா

தொடரை இழந்தது இந்தியா

சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 10 பந்துகள் இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இறுதியில் ஸ்மித் 13 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து மகளிர் அணி 18.2 வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய வீராங்கனைகள் ராதா யாதவ் மற்றும் பூஜா சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்தனர்.

Story first published: Friday, September 16, 2022, 17:25 [IST]
Other articles published on Sep 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+