Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வுமன்ஸ் டி20 சேலஞ்சு.. சூப்பர்நோவாவை துவம்சம் செய்து.. சாம்பியன்ஸ் பட்டம் வென்றது டிரெய்ல்பிளேசர்ஸ்!

துபாய்: வுமன்ஸ் டி20 சேலஞ்சு 2020 தொடரில் டிரெய்ல்பிளேசர்ஸ் அணி இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன்ஸ் பட்டத்தை கைப்பற்றி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரில் இறுதிப்போட்டி நடக்க உள்ள நிலையில்.. இன்னொரு பக்கம் வுமன்ஸ் டி20 சேலஞ்சு 2020 தொடர் அமீரகத்தில் நடந்து வந்தது.

மிக சிறிய அளவில் டிரெய்ல்பிளேசர்ஸ், சூப்பர்நோவா, வெலாசிட்டி ஆகிய அணிகளுக்கு இடையே இந்த தொடர் நடந்தது.

வெற்றி

வெற்றி

இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்து லீக் போட்டிகளில் டிரெய்ல்பிளேசர்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு லீக் போட்டிகளில் ஒன்றில் வென்ற டிரெய்ல்பிளேசர்ஸ், ரன் ரேட் அடிப்படையில் பைனல் சென்றது. அதேபோல் இன்னொரு பக்கம் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்ற சூப்பர்நோவா அணி ரன் ரேட் அடிப்படையில் பைனல் வந்தது.

பைனல்

பைனல்

வெலாசிட்டி அணி வெளியேறிய நிலையில், டிரெய்ல்பிளேசர்ஸ் மற்றும் சூப்பர்நோவா அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த டிரெய்ல்பிளேசர்ஸ் அணி 118 ரன்களை எடுத்தது. டிரெய்ல்பிளேசர்ஸ் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா வெறும் 49 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்.

அதிரடி

அதிரடி

3 சிக்ஸ், 5 பவுண்டரி என்று இவர் அதிரடி காட்டி அணியை சரிவில் இருந்து மீட்டார். அதன்பின் ஆடிய சூப்பர் நோவா அணியில் ஹர்மான்ப்ரீத் கவுர் மட்டும் நன்றாக ஆடி 36 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். டிரெய்ல்பிளேசர்ஸ் அணியின் வலிமையான பவுலிங் படை.. சூப்பர்நோவா வீராங்கனைகளை மொத்தமாக சுருட்டியது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

டிரெய்ல்பிளேசர்ஸ் அணியின் தீப்தி சர்மா 3 ஓவர்கள் போட்டு, வேறு 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் ஆட்டத்தின் முடிவில், சூப்பர்நோவா அணி 20 ஓவரில் வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

வெற்றி

வெற்றி

இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டிரெய்ல்பிளேசர்ஸ் அணி.. வுமன்ஸ் டி20 சேலஞ்சு 2020 தொடரின் சாம்பியன் ஆகியுள்ளது. டிரெய்ல்பிளேசர்ஸ் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா பிளேயர் ஆப் தி மேட்ச் விருது பெற்றார். தீப்தி சர்மா பிளேயர் ஆப் தி சீரிஸ் விருதுபெற்றார்.

Story first published: Tuesday, November 10, 2020, 8:05 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+