Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக்கோப்பை போட்டி.. எந்த சேனலில், செயலியில் பார்க்கலாம்?

துபாய்: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 58 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆட உள்ளது இந்திய அணி.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இலங்கை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு இலங்கை அணியை தோற்கடித்தது.

t20 women world cup 2024 ind vs pak 20 2024

அந்த நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர் கொள்ள உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடக்க உள்ள இந்த போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்? இந்தியாவில் எந்த தொலைக்காட்சி மற்றும் செயலியில் இந்தப் போட்டியை நேரலையில் பார்க்கலாம்? என்பது குறித்த தகவல்களை இங்கே அளித்துள்ளோம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டி நடைபெறும் தேதி, நேரம், மைதானம்:

இந்தியா பாகிஸ்தான் மகளிர் டி20 உலக கோப்பை குரூப் போட்டி 2024, அக்டோபர் 6 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கும். மதியம் 3 மணிக்கு டாஸ் நிகழ்வு நடைபெறும். இந்த போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மகளிர் டி20 உலக கோப்பையை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி சேனல் மற்றும் செயலியில் பார்க்கலாம்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் குழும சேனல்களில் நேரலையில் காணலாம். இந்தியா பாகிஸ்தான் மகளிர் டி20 உலக கோப்பை போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்க விரும்புபவர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்.

Story first published: Sunday, October 6, 2024, 8:39 [IST]
Other articles published on Oct 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+