For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடியோ: “பந்து எங்கனு நீங்க பார்த்தீங்களா?..” உலகக்கோப்பையில் பிரமிப்பு.. விழிப்பிதுங்கிய ரசிகர்கள்

நியூசிலாந்து: மகளிர் உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

Recommended Video

வீடியோ: “பந்து எங்கனு நீங்க பார்த்தீங்களா?..” உலகக்கோப்பையில் பிரமிப்பு.. விழிப்பிதுங்கிய ரசிகர்கள்

மகளிருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் இன்றைய லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் விளையாடி மோதின.

இனி ரஹானே, புஜாரா கிடையாது.. டெஸ்ட் அணிக்கு கடும் போட்டி .. அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புஇனி ரஹானே, புஜாரா கிடையாது.. டெஸ்ட் அணிக்கு கடும் போட்டி .. அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு

பதிலடி தந்த வெஸ்ட் இண்டீஸ்

பதிலடி தந்த வெஸ்ட் இண்டீஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறைந்த இலக்கை எப்படியும் கட்டுப்படுத்த முடியாது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரமான பதிலடி கொடுத்தது. குறிப்பாக

வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை பிடித்த கேட்ச் ஒன்று ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

டைவிங் கேட்ச்

டைவிங் கேட்ச்

ஆட்டத்தின் 5ஆவது ஓவரில் இங்கிலாந்து வீராங்கனை வின்ஃபில்ட் ஹில் பந்தை பாயிண்ட் திசையில் திருப்பி அடிக்க முற்பட்டார். அப்போது அந்த திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியாண்டிரா டாட்டின் தலைக்கு மேலே சென்றது. இதனால் பவுண்டரிக்கான வாய்ப்பு தான் அதிகம் இருந்தது.

ஓங்கிய கைகள்

ஓங்கிய கைகள்

ஆனால் திடீரென காற்றில் ஒரு கை மட்டும் மிதந்தது. பந்தை விட வேகமாக டைவ் அடித்த டியாண்டிரா, ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியாமல் சக வீரர்கள் விழிப்பிதுங்கி பார்த்துக்கொண்டனர். அவர் பந்தை பிடித்தாரா? அல்லது பந்து அவரை பிடித்ததா? என்பது போல ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஐசிசியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த கேட்ச் வீடியோவை பதிவிட்டு இந்த தொடரின் சிறப்பான கேட்ச்களில் ஒன்று இது எனக் கூறி பாராட்டியுள்ளது.

அபார வெற்றி

அபார வெற்றி

அந்த கேட்ச்-க்கு பிறகும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்துவீசியதால், இங்கிலாந்து அணியால் சமாளிக்க முடியவில்லை. 47.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. மகளிர் உலகக்கோப்பை தொடரில் மிகவும் த்ரில்லரான போட்டிகளில் இதுவும் இணைந்துள்ளது.

Story first published: Friday, March 25, 2022, 10:43 [IST]
Other articles published on Mar 25, 2022
English summary
west indies player Deandra Dottin takes a remarkable catch against england inWomens World Cup 2022, video goes trending on internet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X