Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னையா பந்து இது..” உலகக்கோப்பையில் நடந்த விநோத சம்பவம்.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

நியூசிலாந்து: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வீசப்பட்ட ஒரு பந்து ரசிகர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Jhulan Goswami வீசிய வினோத Delivery! Womens Worldcup 2022ல் சம்பவம் | OneIndia Tamil

மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், இந்திய பவுலர் வீசிய ஜுலான் கோஸ்வாமி வீசிய பந்து ஒன்று தனி கவனம் ஈர்த்துள்ளது. இங்கிலாந்து இன்னிங்ஸில் 5 ஓவரை கோஸ்வாமி வீசினார். அவர் வீசிய முதல் பந்து பவுண்டரிக்கு சென்ற நிலையில், அடுத்த 2 பந்துகள் டாட் பால் ஆனது. அதன் பின்னர் 4வது பந்தில் அட்டகாசமான கம்பேக் கொடுத்தார் கோஸ்வாமி.

அந்த ஒரு பந்து என்ன?

அந்த ஒரு பந்து என்ன?

அவர் வீசிய 4வது பந்தை களத்தில் இருந்த நடாலியே தடுப்பாட்டம் ஆட முயன்றார். ஆனால் பந்து இன்ஸைட் எட்ஜாகி ஸ்டம்பிற்குள் நுழைந்தது. இதனையடுத்து அனைவரும் விக்கெட் வீழ்ந்துவிட்டது என உற்சாகமாக துள்ளிக்குதித்து கொண்டாடினர். மேலும் எதிரணி வீராங்கனையும் நடையை கட்டினார். அதன் பின்னர் தான் ட்விஸ்ட் இருந்தது.

 கடைசியில் திருப்பம்

கடைசியில் திருப்பம்

பேட்டை மீறி உள்ளே சென்ற பந்து, ஸ்டம்பில் பட்டுள்ளது. ஆனால் ஸ்டம்பின் மேல் இருந்த பெயில் கீழே விழவில்லை. இதனால் திரைப்படத்தில் காண்பிப்பது போன்று கடைசி நேரத்தில் இந்திய அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒருவேளை இந்த விக்கெட் விழுந்திருந்தால், 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருக்கும். இந்தியாவின் வெற்றி பெறவும் வாய்ப்புகள் இருந்திருக்கும்.

Story first published: Friday, March 25, 2022, 10:41 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+