சிறப்பான தன்னலம் இல்லாத வீரர்... ரன்சை வச்சு மட்டும் அவரை மதிப்பிட முடியாது!
டெல்லி : சத்தீஸ்வர் புஜாராவின் 33வது பிறந்ததினத்தை அவர் இன்று கொண்டாடி வருகிறார்.
அவருக்கு முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேஷவாக், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தன்னலமில்லாத சிறப்பான வீரர் புஜாரா என்றும் அவரது ரன்களை மட்டுமே வைத்து அவரை மதிப்பிட முடியாது என்று வீரேந்திர சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறப்பான வீரர் சத்தீஸ்வர் புஜாரா தனது 33வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் புஜாராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனனலமில்லாத சிறப்பான வீரர் புஜாரா என்றும் அவர் அடிக்கும் ரன்களை மட்டுமே வைத்து அவரை மதிப்பிட முடியாது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் சுவர் போன்றவர் புஜாரா என்றும் அவர் பேட்டிங் செய்யும்போது பௌலர்களின் நிலை என்று அழுகை படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கேஎல் ராகுல், உள்ளிட்டவர்களும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் புஜாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications