Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து புதிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 27ம் தேதியன்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 கொரோனா பரவல்

கொரோனா பரவல்

கங்குலிக்கு அங்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுள்ள போதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே ஒருவேளை அவருக்கு ஒமிக்ரான் தொற்றாக இருக்கலாம் என சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உடல்நிலை எப்படி உள்ளது?

உடல்நிலை எப்படி உள்ளது?

இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரத்த அழுத்தம், சுவாச முறைகள் அனைத்தும் சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர் நேற்று முழுவதும் நன்கு உறங்கியதாகவும் அனைத்து உணவு வகைகளையும் உண்டு வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவரை 3 நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாச பிரச்சினை

சுவாச பிரச்சினை

49 வயதாகும் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இந்தாண்டின் தொடக்கத்தில் இதயப்பிரச்சி்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் சுவாச பிரச்சினை காரணமாக 2வது முறையாக ஆஞ்சியோப்ளாஸ்டி செய்துக் கொண்டார்.

 பணியில் கங்குலி

பணியில் கங்குலி

கங்குலி மீண்டு வர நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கூறி வருகின்றனர். இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விளையாடி வருகிறது. அங்குள்ள கொரோனா பிரச்சினைகளை அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தொலைப்பேசி மூலம் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 29, 2021, 19:34 [IST]
Other articles published on Dec 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+