உல்மர் கொலையாளி ரகசிய கேமிராவில் பதிவு!!
லண்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட ரகசிய கேமிராவில் கொலையாளியின் உருவம் பதிவாகியுள்ளதாக ஜமைக்கா போலீசார் கூறியுள்ளனர்.
பாப் உல்மர் கடந்த மாதம் ஜமைக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜமைக்கா போலீசார் விசாரணை நடத்திய போது முதலில் சூதாட்டக்காரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
![]() |
பின்னர் உல்மரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என ஜமைக்கா போலீசார் கூறினார்.
இந் நிலையில் கடந்த வாரம் லண்டலில் வெளியாகும் த சன்டே டைம்ஸ் நாளிதழில் உல்மருக்கு முதலில் விஷம் கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என செய்தி வெளியானது.
![]() |
இந் நிலையில் உல்மர் தங்கியிருந்த அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் கொலையாளியின் உருவம் பதிவாகியிருப்பதாக ஜமைக்கா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜமைக்க போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
உல்மர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. உல்மர் தங்கியிருந்த அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமிராவில் கொலையாளியின் உருவம் பதிவாகியுள்ளது.
கேமிராவில் உள்ள உருவத்தையும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சூதாட்டகாரர்களுடன் ஒப்பிட்டு வருகிறோம். உல்மர் வழக்கில் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications

