For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே காச மட்டுமே கல்லா கட்ட முடியாது... வீரர்கள் மீது கரிசனம் காட்டும் பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் இந்திய வீரர்களின் தொடர்ந்த விளையாட்டுகள் குறித்து கவனம் கொள்ள வேண்டும் என்று கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பே கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு அறிவுறுத்தியிருந்தார்.

Recommended Video

IPL 2020 | Raina unintentionally hits Dhoni’s bat with his leg worships it later

தொடர்ந்த விளையாட்டுகள், ஓய்வில்லாத பயிற்சிகள் வீரர்களை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் நிலைகுலைத்து வருவதாக கடந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் பணிச்சுமை குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துத்தர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

நிலைகுலையும் வீரர்கள்

நிலைகுலையும் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்த்தால் மிகுந்த பகட்டுடன் உல்லாசத்துடன் இருப்பதாக காட்சியளிக்கும். ஆனால் அடுத்தடுத்த தொடர்கள், ஓய்வில்லாத பயிற்சிகள் மற்றும் தொடர் பயணங்கள் அவர்களை மனதளவிலும் உடலளவிலும் நிலைக்குலைய வைத்து வருவதாக விராட் கோலி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

முன்னதாக அறிவுறுத்திய கோலி

முன்னதாக அறிவுறுத்திய கோலி

ஐபிஎல்லில் அதிகப்படியான போட்டிகளை விளையாட நேர்வதாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்னதாகவே விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் 2019 உலக கோப்பை போட்டியில் இடம்பெறும் நோக்கத்துடன் அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் பங்கேற்று ஆடினர். தொடர்ந்து பல்வேறு தொடர்களிலும் பங்கேற்றனர்.

கோலியின் தொடர் குற்றச்சாட்டு

கோலியின் தொடர் குற்றச்சாட்டு

கடந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும் இதே கருத்தை கேப்டன் விராட் கோலி பதிவு செய்திருந்தார். தொடர் போட்டிகள் காரணமாக வீரர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல் முறையாக நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

ஆலோசிக்க பிசிசிஐ திட்டம்

ஆலோசிக்க பிசிசிஐ திட்டம்

இந்நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் வீரர்களின் பணிச்சுமை குறித்து ஆலோசித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்பு இரானி கோப்பை தொடரின்போது வீரர்களின் பணிச்சுமை மற்றும் மருத்துவம் சார்ந்த தரவுகளை கொண்டு இதுகுறித்து ஆலோசிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ உருக்கம்

பிசிசிஐ உருக்கம்

இந்நிலையில் ஐபிஎல்லில் வீரர்களின் தொடர் போட்டிகள் குறித்து ஐபிஎல் அணிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா மற்றும் இஷாந்த் சர்மா போன்றவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஆயினும் ஐபிஎல் அணிகளை இந்த விவகாரத்தில் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளனர்.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக அணியின் வீரர்களுக்கு தேசிய அணியின் பிசியோவிடம் இருந்து ஆலோசனை பெற வழிவகுக்கப்படும் என்றும் வீரர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் அவர்களின் உடல்நலம் குறித்தும் அறிவுரை வழங்கும் வகையில் இந்த ஆலோசனை இருக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, March 11, 2020, 17:21 [IST]
Other articles published on Mar 11, 2020
English summary
BCCI plans to take extra care of injury-prone players
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+