For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

World Championship: 70 பந்தில் 199 ரன்.. யாரு சாமி நீங்க? தெறிக்க விட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்

நார்தாம்ப்டன்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் இணைந்து 70 பந்துகளில் 199 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கின்றனர். இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சாம்பியன்ஷிப் 20 ஓவர்களில் 274 ரன்கள் குவித்து மிரள வைத்தது. அந்த அணியின் பென் டங்க் 35 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான டேனியல் கிறிஸ்டியன் 35 பந்துகளில் 99 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் 70 பந்துகளில் 199 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியக்க வைத்தனர்.

World Championship of Legends 2024 India Champions india

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர்கள் தற்போது இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் பந்துவீச்சை சிதற விட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியில் இவர்கள் மட்டுமே 70 பந்துகளை சந்தித்து 199 ரன்கள் குவித்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து 50 பந்துகளில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்ட்ரா மூலமாக மேலும் 12 ரன்கள் கிடைத்தன.

இதன் மூலம் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் 274 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஆடிய வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியில் டிவைன் ஸ்மித் 40 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். மற்றொரு துவக்க வீரர் கிர்க் எட்வர்ட்ஸ் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய சாட்விக் வால்டன் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜொனாதன் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் வெற்றி மிகவும் கடினமாக இருந்த சூழ்நிலையில் ஆஷ்லே நர்ஸ் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இருந்தார். டேரன் சம்மி 18 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 40 ஓவர்களில் 493 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி ஏற்கனவே முன்னேறி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள், மூன்று தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, July 10, 2024, 23:37 [IST]
Other articles published on Jul 10, 2024
English summary
World Championship of Legends 2024: Australia's Ben Dunk and Daniel Christian beat West Indies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+