Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

World Championship: 254 ரன்.. யுவராஜ், பதான் சிக்ஸர் மழை.. அரண்டு போன ஆஸ்திரேலியா.. பைனலில் இந்தியா

நார்தாம்ப்டன்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இரண்டாவது அரை இறுதியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், யூசுப் பதான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் பிரெட் லீ மிரண்டு போனார்.

பிரெட் லீ வீசிய 4 ஓவர்களில் மட்டும் 60 ரன்கள் குவித்தது இந்தியா சாம்பியன்ஸ். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா அதிரடி துவக்கம் அளித்தார். அம்பத்தி ராயுடு 14 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 5 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த உத்தப்பா மற்றும் யுவராஜ் சிங் அதிரடி ஆட்டம் ஆடினர்.

World Championship of Legends 2024 India Champions india

ராபின் உத்தப்பா 35 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். அவர் 6 ஃபோர் மற்றும் 6 சிக்ஸ் அடித்து இருந்தார். யுவராஜ் சிங் 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். அவர் 4 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்து இருந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த பதான் சகோதரர்களான யூசுப் தான் மற்றும் இர்ஃபான் பதான் அதிரடியின் உச்சத்தை தொட்டனர். யூசுப் 23 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். அவர் 4 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்து இருந்தார்.

இர்ஃபான் பதான் 19 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். அவர் 3 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்து இருந்தார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 18 சிக்ஸ் அடித்து மிரட்டியது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது இந்தியா சாம்பியன்ஸ் அணி. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியின் பந்துவீச்சில் பீட்டர் ஸிடில் மட்டுமே நான்கு விக்கெட்களை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். ஆஸ்திரேலிய அணியின் அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி இறைத்து இருந்தனர்.

அடுத்து 255 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி ஆடியது. அந்த அணி துவக்கத்திலேயே வரிசையாக விக்கெட்களை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஏழாம் வரிசையில் களமிறங்கிய டிம் பெய்ன் 32 பந்துகளில் 40 ரன்களும், எட்டாம் வரிசையில் இறங்கிய நாதன் கோல்ட்டர் நைல் 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தனர்.

மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சாம்பியன்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த முதல் அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியை, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வீழ்த்தி இருந்தது. இதை அடுத்து இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி இருந்தன. அதே போன்ற ஒரு இறுதிப் போட்டி நடக்க உள்ளது. அதிலும் குறிப்பாக அதே 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்த இரு அணிகளின் ஜாம்பவான் வீரர்கள் இந்த இறுதிப் போட்டியில் மீண்டும் மோத உள்ளனர்.

Story first published: Saturday, July 13, 2024, 9:04 [IST]
Other articles published on Jul 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+