Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK Final- இறுதி போட்டியில் பாகிஸ்தான் ஃபிக்சிங்.. 19வது ஓவரில் நடந்த வினோதம்.. இதை பாருங்க!

லண்டன் : முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற World champions of legend என்ற கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பல பரிட்சை நடத்தியது. பாகிஸ்தானின் தற்போதைய வீரர்கள் தான் இந்தியாவிடம் தொடர்ந்து அடி வாங்குகிறார்கள்.

இதை பார்த்தால் பாகிஸ்தானின் ஜாம்பவான் வீரர்களும், இந்திய ஜாம்பவான்கள் அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

world championship of legends 2024 india champions Pakistan

இந்த நிலையில் இறுதி போட்டியில் மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி வந்தது. இந்த சூழலில் கடைசி ஏழு பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் இந்திய அணி இருந்தது.

ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருந்ததால், கடைசி ஓவரின் ஐந்து ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையை பாகிஸ்தானுக்கு வெற்றியை கொடுத்திருக்கலாம். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் 19வது ஓவரின் கடைசி பந்தை வீசிய வஹாப் ரியாஸ் வேண்டுமென்று தொடர்ந்து இரண்டு அகல பந்துகளை வீசியதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் இந்தியாவுக்கு பேட்டிங் செய்யாமலேயே இரண்டு ரன்கள் கிடைத்தது. இதே போன்று மூன்றாவது முறையாக வீசிய கடைசி பந்தையும் வஹாப் ரியாஸ் ஈசியாக தான் வீசினார். இதனை இர்பான் பதான் எளிதாக அடித்து ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு வெறும் இரண்டு ரன்கள் தான் தேவைப்பட்டது.தற்போது இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வஹாப் ரியாஸ் வேண்டுமென்றே 19-வது ஓவரில் இரண்டு அகல பந்துகளை வீசி இருக்கிறார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஸ்பாட் சிக்ஸிங் ஆக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 19-வது ஓவரின் கடைசி பந்து எப்படி இரண்டு ஓவர் தொடர்ந்து வீச முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஐசிசி இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது போன்று முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் நடப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதால், இதனையும் ஐசிசி கண்காணிக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Sunday, July 14, 2024, 14:22 [IST]
Other articles published on Jul 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+