Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

World Championship IND vs PAK: 243 ரன்கள்.. அரண்டு போன யுவராஜ், இர்பான் பதான்.. பாகிஸ்தான் வெற்றி

பிர்மிங்காம்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும், யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் ஆடியது பாகிஸ்தான் சாம்பியன்ஸ். அந்த அணியின் துவக்க வீரர்களான கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜில் கான் தொடர்ந்து பவுண்டரியாக அடித்து தள்ளினர். சர்ஜில் கான் 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அவர் ஏழு ஃபோர் மற்றும் ஐந்து சிக்ஸ் அடித்து இருந்தார். கம்ரான் அக்மல் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். அவர் 9 ஃபோர் மற்றும் நான்கு சிக்ஸ் அடித்து இருந்தார்.

World Championship of Legends 2024 India Champions india

இவர்களை தடுக்க முடியாமல் திணறிய இந்திய அணியின் கேப்டன் யுவராஜ் சிங், 10வது ஓவரில் இர்பான் பதானை பந்து வீச அழைத்தார். அதற்கு முன் ஆறு பந்துவீச்சாளர்கள் பந்து வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பத்தாவது ஓவரில் இர்பான் பதான் பந்து வீச்சில் மூன்று ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்தது கம்ரான் அக்மல் - சர்ஜில் கான் ஜோடி. அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் குவித்தது பாகிஸ்தான்.

அதனால் யுவராஜ் சிங் மற்றும் இர்பான் பதான் மிரண்டு போனார்கள். அதன் பின்னர் பதானுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்ஜில் கான் 72 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சோயப் மக்சூத் 26 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அவர் இரண்டு ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்திருந்தார். சோயப் மாலிக் கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். ஷாஹித் அப்ரிடி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

இதை அடுத்து பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்தியா சாம்பியன்ஸ் அணியால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அளவிற்கு ரன் குவிக்க முடியவில்லை. ராபின் உத்தப்பா 12 பந்துகளில் 22 ரன்கள், அம்பத்தி ராயுடு 23 பந்துகளில் 39 ரன்கள், சுரேஷ் ரெய்னா 40 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்தனர்.

மற்ற பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன் குவிக்கவில்லை. யுவராஜ் சிங் 14 ரன்கள், இர்ஃபான் பதன் 15 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதை அடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா சாம்பியன்ஸ் அணி. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 68 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் இந்த தொடரின் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மூன்று போட்டிகளில் ஆடி மூன்று வெற்றிகள் பெற்று ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

Story first published: Sunday, July 7, 2024, 10:44 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+