Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

World Championship: பாகிஸ்தானை கதற விட்ட வெஸ்ட் இண்டீஸ்.. 9 பந்தில் 4 சிக்ஸ் பறக்க விட்ட எம்ரிட்

நார்தாம்ப்டன்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின. முன்னதாக நடந்த குரூப் சுற்றில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று இருந்ததால், அந்த அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் அரை இறுதியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அந்த அணியில் யூனிஸ் கான் 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் கம்ரான் அக்மல் 31 பந்துகளில் 46 ரன்களும், பின்வரிசை வீரர்களான ஆமீர் யாமின் 18 பந்துகளில் 40 ரன்களும், சோஹைல் தன்வீர் 17 பந்துகளில் 33 ரன்களும் குவித்தனர். ஷர்ஜீல் கான், சோயப் மாலிக், மிஸ்பா உல் ஹக் ஆகிய மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி இருந்தனர்.

World Championship of Legends 2024 India Champions india


அடுத்து 199 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வரிசையாக விக்கெட்களை இழந்தது. பின்னர் 7 விக்கெட்கள் இழந்த நல்,நிலையில் கடைசி இரண்டு ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் 19-வது ஓவரை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராயத் எம்ரிட் வரிசையாக மூன்று சிக்ஸர்களை அடித்து பாகிஸ்தான் அணியை கதிகலங்க வைத்தார். 19வது ஓவரில் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ரன்கள் எடுத்தது.

அதனால் கடைசி ஒரு 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது வெஸ்ட் இண்டீஸ். ராயத் எம்ரிட் 9 பந்துகளில் 4 சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து மொத்தம் 29 ரன்கள் குவித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 322 ஆகும். அவர் 19வது ஓவரின் கடைசி பந்திலேயே ஆட்டம் இழந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

எனினும், கடைசி ஓவரில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சரியாக பந்து வீச வேண்டிய பதற்றத்தில் இருந்தது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி. கடைசி ஓவரை வீசிய சோஹைல் கான் அபாரமாக பந்து வீசி கடைசி இரண்டு விக்கெட்களையும் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் பவுல்ட் அவுட் முறையில் வீழ்த்தினார். இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Story first published: Saturday, July 13, 2024, 6:49 [IST]
Other articles published on Jul 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+