Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

World Championship: இந்தியா - பாகிஸ்தான் பைனல் எப்போது? தேதி, நேரம், எந்த சேனலில் பார்க்கலாம்?

மும்பை: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோத உள்ளன. 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை போன்ற ஒரு போட்டியாக இது நடக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

முன்னதாக இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று இருந்தது. இந்தியா சாம்பியன்ஸ் அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று இருந்தது. அரை இறுதியில் பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ்-ஐ வீழ்த்தி இருந்தது. மறுபுறம் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியை, யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி வீழ்த்தி இருந்தது.

world-championship-of-legends-2024-which-channel-telecast-india-champions-vs-pakistan-champions-fin

அந்தப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் 20 ஓவர்களில் 254 ரன்கள் குவித்து மிரள வைத்து இருந்தது. யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, பதான் சகோதரர்கள் சிக்ஸர் மழை பொழிந்து அரைசதம் அடித்து இருந்தனர். அரை இறுதியில் வென்ற இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

கிட்டத்தட்ட 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் என்ன நடந்ததோ, அதே போன்ற ஒரு சூழ்நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. 2007 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த யுவராஜ் சிங், ஆர்பி சிங், ராபின் உத்தப்பா, ஹர்பஜன் சிங், யூசுப் தான், இர்ஃபான் பதான் ஆகிய வீரர்கள் தற்போது இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்று உள்ளனர்.

மறுபுறம் 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்த மிஸ்பா உல் ஹக், கம்ரான் அக்மல், யூனிஸ் கான், சோயப் மாலிக், ஷாஹித் அப்ரிடி, சோஹைல் தன்வீர் ஆகிய வீரர்கள் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்று உள்ளனர். இதை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

தங்கள் கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் ஒரு டி20 தொடரின் இறுதி போட்டியில் மோத இருப்பதை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த போட்டியை இந்தியாவில் எந்த சேனலில் பார்ப்பது? எந்த தேதி, எந்த நேரத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெறும்? உள்ளிட்ட தகவல்களை இங்கே காணலாம்.

இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடைபெறும் நாள் மற்றும் நேரம்:

இன்று (ஜூலை 13, சனிக்கிழமை) இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதும் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும்.

இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியை இந்தியாவில் எந்த சேனலில் பார்ப்பது?

இந்த இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம். குறிப்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தியில் இந்த தொடர் துவக்கத்தில் இருந்தே ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியை எந்த மொபைல் அல்லது இணையதளத்தில் பார்க்க முடியும்?

இந்த இறுதிப் போட்டியை ஆன்லைனில் பார்க்க விரும்புபவர்கள் ஃபேன் கோடு (Fan Code app) என்ற மொபைல் செயலியில் இந்த போட்டியை காணலாம். ஃபேன் கோடு (Fan Code) இணையதளத்திலும் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த செயலி அல்லது இணையதளத்தில் பார்க்க சந்தா செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு போட்டியை மட்டும் பார்க்க விரும்புபவர்கள் 25 ரூபாய் மட்டும் செலுத்தி பார்க்கலாம்.

Story first published: Saturday, July 13, 2024, 12:19 [IST]
Other articles published on Jul 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+