For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஓவரில் 11 ரன் எடுத்தால் வெற்றி.. இங்கிலாந்தை கதற விட்ட சோஹைல்.. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் வெற்றி

எட்ஜ்பாஸ்டன்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று ஆடும் 2025 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் (WCL) தொடரின் முதல் போட்டியே திக்திக் முடிவை பெற்று சுவாரஸ்யத்தை எகிற வைத்துள்ளது. இந்த முதல் போட்டியில், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிகரமாக தொடரை துவக்கியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முகமது ஹஃபீஸ் மற்றும் ஆமர் யாமின் ஆகியோரின் பேட்டிங் மற்றும் சிறப்பான பந்துவீச்சு பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தது.

முதல் இன்னிங்ஸ்: பாகிஸ்தான் சவாலான ஆட்டம்

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சிகரமாக இருந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், அனுபவ வீரரும் கேப்டனுமான முகமது ஹஃபீஸ் நிதானமாக ஆடி, அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அவர் 34 பந்துகளில் 54 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

World Championship of Legends 2025 Pakistan Defeats England in Thrilling Opening Match

கடைசி கட்டத்தில் ஆமர் யாமின் அதிரடியாக விளையாடி, வெறும் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சோஹைல் தன்வீர் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து உதவ, பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ட்ரெம்லெட் மற்றும் லியாம் பிளங்கெட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி நூலிழையில் தோல்வி

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் மஸ்டர்ட் மற்றும் இயான் பெல் வலுவான அடித்தளம் அமைத்தனர். மஸ்டர்ட் 51 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார், இயான் பெல் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருப்பினும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக, ருமான் ரயீஸ் 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான் சிறப்பாக பந்துவீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்ட நாயகன்: முகமது ஹஃபீஸ்:

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட முகமது ஹஃபீஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பொறுப்பான அரைசதம் மற்றும் களத்தில் கேப்டனாகவும் அவரது முடிவுகள் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

Story first published: Saturday, July 19, 2025, 9:23 [IST]
Other articles published on Jul 19, 2025
English summary
World Championship of Legends 2025: Pakistan Defeats England in Thrilling Opening Match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+