Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா புரட்டி எடுக்க முத்தான காரணங்கள் பத்து!

மெல்போர்ன்: பலம் வாய்ந்த பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளை அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில், புரட்டிப் போட்ட உற்சாகம் இந்திய கிரிக்கெட் கூடாரத்தில் பீறிட்டபடி உள்ளது. அதிலும், பாகிஸ்தானைவிட பல மடங்கு பலம் மிக்க அணியும், உலக கோப்பையை வெல்லக் கூடிய அணி என்று கணிக்கப்பட்டதுமான தென் ஆப்பிரிக்காவை நைய புடைத்து எடுத்து 130 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை பரிசாக அளித்த பிறகு இந்தியாவின் தன்னம்பிக்கை தாறுமாறாக எகிறித்தான் போயுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கான காரணங்கள் ஒன்றல்ல பத்து உள்ளன. போட்டியின் முக்கியமான திருப்பு முனைகளான அந்த 10 நிகழ்வுகள் பற்றிய ஒரு பருந்து பார்வை, இதோ:

ஷிகர்தவான் சதம்

ஷிகர்தவான் சதம்

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 7வது சதத்தை பதிவு செய்தார். அவர் எடுத்த 137 ரன்கள்தான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உலக கோப்பையில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 2011 உலக கோப்பையின்போது 111 ரன்களை எடுத்திருந்தார். தவானின் செஞ்சுரி இந்த போட்டியின் மிக..மிக.. முக்கியமான திருப்புமுனையாகும்.

அதிரடி ரஹானே

அதிரடி ரஹானே

ஓவர்கள் குறைவாக இருக்கும் தருணத்தில் களமிறங்கிய அஜிங்ய ரஹானே 60 பந்துகளில் 3 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உதவியுடன் 79 ரன்களை குவித்தார். ரன் ரேட்டில் தொய்வடைந்திருந்த இந்தியாவுக்கு ரஹானே பூஸ்ட் கொடுத்தார்.

300க்கு மேல் குவித்தது

300க்கு மேல் குவித்தது

உலகின் தலை சிறந்த வேகப்பந்து தாக்குதலை வைத்துள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் எடுத்தது. 300 ரன்களுக்கு மேல் எடுத்ததால், மனரீதியாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் சோர்வுக்குள்ளாகிவிட்டனர்.

கூட்டாளிகள்

கூட்டாளிகள்

நேற்றைய போட்டியில் இந்தியாவின் பலமே, பார்ட்னர்ஷிப்புகள்தான். தென் ஆப்பிரிக்காவுக்கு அதுபோன்ற பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமையாத நிலையில், இந்தியா 2 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை தாண்டியது. தவான்-கோஹ்லி இணைந்து 127 ரன்களும், தவான்-ரஹானே இணைந்து 125 ரன்களும் குவித்தனர்.

வாவ்.. வாட் ஏ ரன் அவுட்

வாவ்.. வாட் ஏ ரன் அவுட்

தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பவுண்டரி லைனில் இருந்து குறிதவறாமல் டோணியிடம் த்ரோ வீசிய மோகித் ஷர்மாவும், அதைத் தொடர்ந்த ரன் அவுட்டும் போட்டியின் மிக முக்கியமான தருணமாகும். வில்லியர்சும், டுப்ளிசிசும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தபோது, அந்த ரன் அவுட் அதை அடித்து நொறுக்கியது.

தெறி மாஸ் ஃபீல்டிங்

தெறி மாஸ் ஃபீல்டிங்

இந்தியாவின் ஃபீல்டிங், இளம் வீரர்கள் வருகையால், சமீபகாலங்களாக மேம்பட்டுவந்த போதிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அது மிக அற்புதமாக அமைந்தது. எதிரணி வீரர்களே அந்த ஃபீல்டிங்கை பார்த்து வாய் பிளந்து பாராட்டிவருகின்றனர்.

தலையிருக்க வால் ஆடலாமா..

தலையிருக்க வால் ஆடலாமா..

என்னதான் வால்கள் ஆடினாலும், தலைதானே முக்கியம். யெஸ்... டோணியின் கேப்டன்ஷிப் யுக்தி பிரமாதமாக இருந்தது. சவுரவ் கங்குலியும் இதை பாராட்டியுள்ளார். மோகித் ஷர்மாவை முன்கூட்டியே வரவழைத்ததில் ஆரம்பித்து, பல்வேறு வியூகங்கள் பாராட்டத்தக்கதாக இருந்தன.

போடா.. அந்த ஆண்டவனே நம்ப பக்கம்

போடா.. அந்த ஆண்டவனே நம்ப பக்கம்

அதிருஷ்டவசமாக, டாசில் இந்தியா வெற்றி பெற்றது. மெல்போர்ன் மைதானத்தில், 300 ரன்களை விரட்டிச் சென்று பிடித்த வரலாறு, பூகோளம் கிடையாது. அதை சாதகமாக்கிக் கொண்டு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் டோணி. ஏற்கனவே உலக கோப்பைகளில் 3 போட்டிகளிலும் இந்தியா முதலில் பேட்டிங் செய்து தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதை டோணி பொருட்படுத்தவில்லை. சமயோஜிதமாக யோசித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

நம்ம பவுலர்களா இது..

நம்ம பவுலர்களா இது..

இந்தியாவின் பவுலிங் யாரும் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. முதல்கட்ட ஓவர்களில் முகமது ஷமியும், நடுவில் அஷ்வினும் அமர்க்களப்படுத்தினர்.

குட்டி இந்தியா

குட்டி இந்தியா

இந்திய வெற்றிக்கு, அதன் ரசிகர்களின் ஆரவாரமும் ஒரு முக்கிய காரணம். போட்டிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டனே இந்த உண்மையை ஒப்புக் கொண்டார். ஸ்டேடியத்தில் இருந்த சுமார் 90 ஆயிரம் ரசிரகர்களில், முக்கால்வாசிபேர் இந்திய ரசிகர்கள்தான். இந்திய வீரர்கள் தாய் நாட்டில் ஆடுவதை போலவே உணர்ந்தனர்.

Story first published: Monday, February 23, 2015, 13:31 [IST]
Other articles published on Feb 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+